உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழையமுற்பட்டவேளை தெல்லிப்பழையில் மக்கள்-பொலிஸார் முறுகல்

news

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொறுப்பு வாய்ந்தவர்களது உதாசீன நடவடிக்கை காரணமாக ஆத்திரமடைந்து உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நுழையமுற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ்காவலையும் மீறி பிரதெச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றார்கள்.

இந்திய அரசே அணு உலையினை உடனே நிறுத்து; யாழில் முழங்கிய குரல்கள்

இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான இவ் போராட்டம் இந்தியா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலையினால் இலங்கைக்கும் பாதிப்புக்கள் ஏற்ப்படும் இதனால் இந்திய அரசே உடனடியாக அணு உலை நிர்மாணப் பணிகளை  நிறுத்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.