Back முகப்பு அரசியல் ஏடுகள் புதிய ஜனநாயகம்

ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!

ழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2009-ஆம் ஆண்டு மே மாதம்) இலங்கையின் இனவெறி பாசிச, பயங்கரவாத அரசும் இராணுவமும் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனிதத் தன்மைகள் சிறிதுமற்றதாக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள்தாம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இந்த போர்க் குற்றங்களை நடத்திய இலங்கை அரச பயங்கரவாதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை, கடும் தண்டனை என்பதற்கு பதிலாக “மனித உரிமை மீறல்கள்” என்ற நீர்த்துப்போன பெயர் சூட்டி குற்றவாளிகளே விசாரித்து, நிவாரணம் தேடிக் கொள்ளச் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு நிறைவேற்றி ஓராண்டாகப் போகிறது. அதன் மீதான பரிசீலனை இம்மாதம் அவ்வமைப்பில் வரவிருக்கும் சூழலில் சேனல்-4 என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி “நிகழாத அமைதி மண்டலம் – இலங்கையின் படுகொலைக் களம்” என்ற ஆவணப் படத்தை அவ்வமைப்பின் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கப் போகிறது.

விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது.

தோழர் வர்கீஸ் சுட்டுக்கொல்லப்பட்டு, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தண்டனை

இழுத்துச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கண்களை பிடுங்கி எடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டார் தோழர் வர்கீஸ். இவர் செய்த குற்றமென்ன? சிபிஎம் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத்தோட்ட முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் கொடுரச் சுரண்டல்களையும், கொத்தடைமைத்தனங்களையும் அந்தப்பகுதி மக்களிடம் விளக்கி, அவர்களை எழுச்சியுறச் செய்தார். பழங்குடி மக்களைப் பிடித்து, வள்ளியூர் கோவில் திருவிழாவில் ஆடுமாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் அடாவடியை எதிர்த்துப் போராடினார். இவைகளைத்தான் குற்றம் என்று கூறி இழுத்துச் சென்றது அதிரடிப்படை போலீஸ்.