விளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்!!!

விளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்!!!

பெருமரம் சரிந்து விழும் போது வீராதிவீரன் வாத்தி...

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!

எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம்....

Sinhala/English

Back முகப்பு எமது கருத்துக்கள் அல்லாதவை எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஸ்ரீலங்காவாசிகளின் முதிர்ச்சியடைந்த சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.

எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஸ்ரீலங்காவாசிகளின் முதிர்ச்சியடைந்த சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கை ஸ்ரீலங்காவாசிகளின் முதிர்ச்சியடைந்த சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.  -ஜெகான் பெரேரா

”தென்பகுதியின் இரண்டு பிரதான அரசியற் கட்சிகளினதும் அரசியல் தலைவர்கள், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு நடந்தும் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதில் தம்மிடையே போலியான கருத்தொற்றுமைகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால் இந்த மோதல்களை தவிர்த்திருக்க முடியும்”.

 

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்(எல்.எல்.ஆர்.சி) அறிக்கை வெளியானதும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், அதனை நிராகரித்திருப்பது, அதன் ஆரம்ப எதிர்தாக்கங்களில் ஒன்று. அவர்கள் ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகள் மீதான தங்கள் திருப்திக் குறைவை வெளியிட்டிருப்பதுடன், சிலர் அது அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஒரு வெள்ளையடிக்கும் முயற்சி என்று கூறும் எல்லைவரை கூடச் சென்றிருக்கிறார்கள்.

மே 2010ல் எல்.எல்.ஆர்.சி அமைக்கப்பட்ட சூழ்நிலையையும், ஐநா செயலாளர் நாயகத்தினால் ஸ்ரீலங்காவில் நடந்த யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவினரது அறிக்கையின் பின்விளைவுகளையும் முடிவு செய்து அவர்களின் பதில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமித்ததினை, ஐநா அறிக்கையின் வெளிச்சத்தில் காண்பதோடு, அரசாங்கம் அந்த அறிக்கைக்கான பதிலை இதன்மூலம் வழங்கும் என்கிற நம்பிக்கையுடனும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் யாவும் எல்.எல்.ஆர்.சி மூலம் வழங்கப்படும் என்றும் கூறிவந்தது.

எனினும் ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரம் அது உண்மையில் அத்தகைய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்கிற தனியான மேற்கோள் எதனையும் கொண்டிருக்கவில்லை.அத்தகைய குற்றச்சாட்டுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்கான விசாரணை நுட்பமும் ஆணைக்குழுவிற்கு வழங்கப் படவில்லை.

இதுவரை காலமும் வெற்றி கொள்ள முடியாதிருந்த எல்.ரீ.ரீ.ஈ யினை நசுக்கி வெற்றி கொண்டபின்னர், யுத்தக் குற்றங்கள் என்கிற கருப்பொருளிலில் அதன் சொந்த கேடுகளுக்காக, செய்த குற்றங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது அல்லது சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு விடையளிக்கும் வகையில் ஆய்வுகளைத் தொடருவதில்லை, என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தலைமை நம்பிக்கை கொண்டிருப்பது வெகு தெளிவாகத் தெரிகிறது.

விக்கிலீக்ஸின் மிகவும் பிரபலமான ஸ்ரீலங்காவின் தெரியப்படுத்தல்களில் ஒன்றாக ,அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டனிஸ் பதவியிலிருக்கும் ஒரு அரசாங்கத்திடம் அதன் சொந்தத் தவறுகளை சுய பரிசோதனை செய்யும்படிகூறி விளைவுகளை எதிர்பார்ப்பது நியாயமாகாது என்று தனது அரசாங்கத்துக்கு எழுதிய குறிப்புகளிலில் சொல்லியிருப்பதிலிருந்தே இது தெரிகிறது.

விசேடமாக அந்த அரசாங்கம் பொதுமக்களின் பிரசித்தியின் உச்சத்தின் மீது சவாரி செய்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் அதனிடம் கேள்வி எழுப்பப்படுகிறது, என்கிற அமெரிக்கத் தூதுவரின் அவதானிப்பு ஒரு பொது அறிவின் வெளிப்பாடாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் மனித உரிமைகள் அமைப்புகள் எல்.எல்.ஆர்.சி அறிக்கையினை விமர்சிப்பதையும் அதனை நிராகரிப்பதையும் பற்றி ஆச்சரியம் அடைவதற்கு எந்தக் காரணமும் கிடையாது. அவர்களின் முக்கிய கவனம் போரின்காரணமாக ஏற்பட்ட பலவிதமான துன்பியல் சம்பவங்களுக்கும் விசேடமாக அரக்கத்தனமான இறுதிக்கட்ட வேளையில் நடைபெற்றவைகளுக்கு கணக்கு கூறப்பட வேண்டும் என்பதிலேயே இருந்ததுடன், யுத்த இயந்திரத்தை முன்னின்று இயக்கிய அரசாங்கத்தின் தலைமையை குறி வைப்பதே அவர்களின் முக்கிய இலக்காக இருந்தது. அவர்கள் தேடும் கேள்விகளுக்கு விடைதரக்கூடிய பொறிமுறையாக எல்.எல்.ஆர்.சி இல்லை என்பதை ஆணைக்குழுவினை அமைக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே அவர்கள் சுட்டிக்காட்டியதுடன் அதனுடன் ஈடுபட்டு ஒத்துழைக்கவும் அவர்கள் இறுதிவரை மறுத்து வந்தார்கள்.

ஸ்ரீலங்கா அரசியல் கட்சிகளின் ஆரம்பக்கட்ட மௌனம் கூடக் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐதேகவும் மரணம் வரையான அதன் உட்கட்சிப் போரில் தீவிரமாகவுள்ளது. ஐதேக விற்குள் நடக்கும் தலைமைத்துவப் போராட்டம் கூட கசப்பான உட்கட்சித் தேர்தல்களை நடத்தும் அளவிற்கு அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தக் கட்டத்தில் அதன் தலைமை இதற்கான சிறந்த பதிலை வழங்குவது ஒருவேளை தவிர்க்க முடியாததாக இருக்கலாம், அது அவதானிப்புகளை மேற்கொள்வதுகூட மேற்றிராணியார் தனது உபகுருவிடம் ஒரு நாறல் முட்டையைக் கொடுத்து, அதன் பாகங்களை அவதானித்து அதன் சிறந்த பாகங்களை அறிவிக்கும்படி கூறுவதைப்போல இருக்கும்.
ஆனால் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது,அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமைகளின் தூண்டுதல்களுடன் யுத்தத்தின் பின்விளைவுகளைப்பற்றி தேசிய சொற்பொழிவுகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டிவரும் தீவிர தேசியவாதக் கட்சிகளின் அணியில் ஏற்பட்டுள்ள மௌனம்தான். எல்.எல்.ஆர்.சி முன்பாக அவர்கள் தங்கள் தரவுகளை விளக்கியபோது தேசியவாத ஊடகங்கள் அதற்கு உயர்ந்தபட்ச பிரபல்யம் வழங்கின.

கடினமான பணி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு(எல்.எல்.ஆர்.சி) சந்தேகமில்லாமல் ஒரு கடினமான பணியையே எதிர்கொண்டது.

சர்ச்சைக்குரிய முப்பது வருட காலமாக நாட்டைக் கலங்கடித்து, பாரிய இன்னல்களையும் மற்றும் இழப்புகளையும் அதன் மக்களுக்கு ஏற்படுத்திய கொடியபோரின் முடிவின் நிழலில்தான் இந்த ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். மறுபக்கத்தில் முடிவடைந்த யுத்தம் பாரியளவிலான மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள், அவற்றில் சில இன அழிப்பை வலியுறுத்துவதாக உள்ளன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் கொண்டு வந்தன. இன்னொரு பக்கத்தில் பயங்கரவாதம், பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் குண்டுவீச்சு என கடந்த மூன்று தசாப்தங்களாக கிளைவிட்டு படர்ந்திருந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது, இறுதிப்போர் நிகழ்ந்த இடங்களைத் தவிர பெரும்பாலும் அது முழு நாட்டிற்குமே அனுபவித்து உணரக்கூடிய ஆறுதலைக் கொண்டுவந்தது. ஆணையாளர்கள் கூட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தைச் சந்திப்பது, மற்றும் அவர்கள் சொல்வதை ஆவணப்படுத்துவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நேருக்கு நேர் சந்திப்பது என்று மாதக்கணக்கில் நேரத்தைச் செலவிட்டார்கள்.

ஸ்ரீலங்காவின் முன்னணி அறிவுஜீவிகள் மற்றும் சிந்தனைச்சிற்பிகள் கூட உண்மையின் சிறந்த பகுதியைக் கொண்டிருப்பதாக தாங்கள் ஒவ்வொருவரும் நம்பும் தங்கள் கருத்துக்களை வேறுபட்ட முன்னோக்குகளில் தெரிவிப்பதற்காக ஆணைக்குழுவின் முன்பாகத் தோன்றியிருந்தனர்.

ஆணையாளர்கள் முன்பாகவிருந்த மிகப்பெரிய சவால், அவர்களை நியமித்த அரசாங்கம் வழங்கியிருந்த உறுதிப்பாடுகளை ஏற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்வதுதான்.த ங்கள் அறிக்கையில் ஆணையாளர்கள் அரசாங்கத்துக்கு ஒரு அடிப்படைச் சலுகையை வழங்கியுள்ளார்கள்,” எல்.ரீ.ரீ.ஈ பிடித்து வைத்திருந்த இடங்களைக் கைப்பற்றுவதற்காக கையாண்ட இராணுவ மூலோபாயம் குடிமக்களின் பாதுகாப்புக்கு அதி உயர் முன்னுரிமை வழங்கப்பட்டது” என்பதை கவனமாக கருதியது மூலமாக அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

யுத்தம் ஒன்றை நடத்தும்போது சொல்லப்படும் இலட்சியங்கள் என்னவாக இருப்பினும் யதார்த்தில் அது வித்தியாசமான நிலைகளுக்கு உட்படுகிறது. இதனால்தான் ஒரு அரசாங்கம் தனது புத்திசாலித்தனமான தேர்ந்தெடுக்கும் கடைசித் தெரிவாக, எதிரியை தோற்கடிப்பதற்காக மாறுபட்ட அதியுயர் முன்னுரிமை வழங்கும் தெரிவாக யுத்தம் உள்ளது. மரணம் வரை போராடும் ஒரு யுத்தத்தில், அந்த நிகழ்வின் பின்பு உண்மையில் என்ன நடந்தது, அது ஏன் அந்த வழியில் நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஒரு யுத்தம் நடக்கும் உஷ்ணமான சூழலில் குறிப்பாக உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கிக் காட்டுவதற்காக எல்.எல்.ஆர்.சி தனது அவதானத்தை, அமெரிக்க விமானத் தாக்குதல் மூலம் சுமார் நான்கு மணி நேரத்துக்குள் 24 பாகிஸ்தானிய படைவீரர்கள் கொல்லப்பட்ட சமீபத்தைய சம்பவத்தால் அமெரிக்காவும் மற்றும்; பாகிஸ்தானும் முரட்டுத்தனமாக மோதிக்கொள்ளும் விடயத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுவது, “இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மரணம், காயம் ஏற்படுதல் அல்லது சொத்துக்கு அழிவு ஏற்படுதல் என்பனவற்றை விபரிக்க சர்வதேச தீர்ப்பாயங்கள் மேற்கோள் காட்டுவது, ஒரு தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அனைத்தும் இணைந்த சூழ்நிலையில் போதுமான அறிவிப்புகளுடன் இடம் பெற்ற ஒரு யுத்த நடவடிக்கைக்கு மீள்கட்டமைப்பை பெறுவது ”சாத்தியமற்றதுக்கு அடுத்தது” என கொள்கை அதிகாரிகள் கூறும் விளக்கத்தைத்தான்”. அது உண்மையாக இருக்கும், ஏனெனில் உண்மையை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ள சூழ்நிலையில பாகிஸ்தான் பதிப்பான விடயத்தை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானில் நடந்த சம்பவத்துக்காக அமெரிக்க அரசாங்கம் இதுவரை மன்னிப்புக் கோர மறுத்து வருவதால் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக முறையான விசாரணையை நடத்தும்படி வலியுறுத்தி அரசாங்கமும் மக்களும் உறுதிப்படுத்துவதில் அங்கு ஐக்கியப்பட்டு நிற்கிறார்கள்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்போதும் எல்.ரீ.ரீ.ஈ எந்த ஒரு குடிமக்கள் கட்டமைப்பையும், ஸ்ரீலங்காப் படைகளை தாக்குவதற்கும் மற்றும் தூண்டுவதற்கும் உரிய ஒரு மறைப்பாகப் பயன்படுத்தியது என்பதே,

அத்தோடு அவர்கள் உண்மையில் முழு குடிமக்கள் தொகையினையையும் ஒரு மனிதக் கேடயங்களைப் போன்ற பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர் என்பது நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் எல்.எல்.ஆர்.சி இந்தச் சம்பவங்களுக்கான விசாரணையை கோரியருப்பது மூலம் இதனால் பாதிக்கப் பட்டவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதுடன்,சமரச முயற்சிகளில் வலிமையான நம்பிக்கையை விதைக்கவும் முடியும்.

யுத்தக்களத்தில் நடைபெற்ற கைதிகளின் கொலைகள் மற்றும் பெண்கைதிகள் மீது பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டபின் அவர்களைக் கொல்வது போன்ற அப்பட்டமான காட்சிகளைக் கொண்ட சனல் 4 ன் காணொளிப் பதிவுகள் விடயத்திலும் எல்.எல்.ஆர்.சி ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆணைக்குழுவானது அசல் படங்களை வழங்கியவர்கள் மற்றும் அதனை ஒளிபரப்பியவர்கள் போன்றவர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி விசாரணை வெற்றிகரமாக நடைபெற உதவும்படியும் வலியுறுத்தியுள்ளது.யுத்தகளத்தில் உண்மையில் என்ன பரிமாறப்பட்டது என்பதற்கான உண்மையான கணக்கினை அந்தக் காணொளிகள் நிரூபிக்கும் பட்சத்தில்,” இவைகள் யாவும் தெளிவான சட்ட விரோதச் செயல்களானபடியால் அதற்கான விசாரணையையும் மற்றும் குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குத் தொடருவதையும் மேற்கொள்ளும்படியும் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அரசியல் தீர்வு

ஒரு சர்வதேச மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் ஸ்ரீலங்கா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாக தெரிவது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக்; என்பனவற்றின் பொறுப்புக்களை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் மேல் சுமத்துவதைத்தான்.

எனினும் ஸ்ரீலங்காவின் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான விடயம் இந்த யுத்தத்துக்கு மூல வேராக உள்ள காரணத்தைக் கண்டறிந்து அதற்கு பரிகாரம் வழங்குவதுடன் மற்றும் நல்லாட்சியை வழங்குவதுமே.

ஆனால் துரதிருஷ்டவசமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் எண்ணற்ற சந்தர்ப்பங்களில், அரசாங்கத் தலைவர்கள் சொல்லி வந்தது,யு த்தத்தின் முடிவோடு சமாதானம் வந்துவிட்டது, மற்றும் சமாதானத்தோடு எமக்குத் தேவையாக உள்ளது பொருளாதார அபிவிருத்தி மட்டுமே, அதைத் தவிர மற்றொன்றும் தேவையில்லை என்று. அரசியல் தீர்வினைப்பற்றி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோது அதற்கான அரசாங்கத் தலைவர்களது பதிலாகவிருந்தது, எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவுக்குப் பின்னர் அத்தகைய மறுசீரமைப்பு என்பது அவசியமற்றது என்று.

இவ்வாறான சூழலில், ஸ்ரீலங்கா அதன் பாடங்களை நன்கு கற்று அதன்; மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தை அணுக வேண்டுமானால் அதன் கடந்த காலத்துடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தத் தக்கதான மாற்றுச் சிந்தனைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எல்.எல்.ஆர்.சி அறிக்கை பிரதிபலிக்கிறது.

அதுதான் தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்க்கும் பரிகாரமாகச் செயற்படுத்த வேண்டிய அரசியல் தீர்வு. இதனை எல்.எல்.ஆர்.சி வித்தியாசமான சிந்தனை அமைப்புடன் மிகவும் பாராட்டத்தக்க நிலையில் தற்போதைய அரசாங்கத் தலைமை முக்கியமாக உத்தரவாதப் படுத்த வேண்டியதாக உள்ளபடி எடுத்தியம்பியுள்ளது.

பிரதான அரசியற்கட்சிகள் தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதான ஒரு அரசியற்தீர்வினை வழங்குவதில் தோல்வி கண்டமையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினரின் தீவிரவாத நிலைகளிலும் மற்றும் நடத்தைகளிலும் இருந்து தம்மை அன்னியப்படுத்துவதில் தமிழ் அரசியற் கட்சிகள் தோல்வி கண்டமையுமே,ந hம் அவசியம் தீர்த்து வைக்க வேண்டிய கடந்த கால யதார்த்தங்களாக நம் முன்பாக உள்ளன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

எல்.எல்.ஆர்.சி யுத்தம் ஏற்பட்டதுக்கான குற்றத்தை, கடந்தகால சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இருபகுதித் தலைவர்கள் மீதும் சுமத்துகிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:, ”தென்பகுதியின் இரண்டு பிரதான அரசியற் கட்சிகளினதும் அரசியல் தலைவர்கள், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு நடந்தும் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதில் தம்மிடையே போலியான கருத்தொற்றுமைகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால் இந்த மோதல்களை தவிர்த்திருக்க முடியும்”.

“இந்த மோதல்களை ஏற்படாமல் தவிர்த்திருக்கக் கூடிய சமமான பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது, அவர்கள் பிரிவினை ஊடாக ஆயுதப் போராட்ட பிரச்சாரத்தை ஊக்குவிக்காது தவிர்த்திருந்தால், எல்.ரீ.ரீ.ஈ தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருபகுதி மக்களுக்கும் எதிராக பயன்படுத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகள் என்பனவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டிருக்காது.”

ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது,”சகல பகுதியையும் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தன்னடக்கத்துடன் ஒன்றுசேர்ந்து, இத்தகைய ஒரு மோதல் உருவாவதை தடுக்க முடியாமற் போன அரசியற் தலைமைகளின் கூட்டுத் தோல்வியின் விளைவாக உருவான இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட வேண்டும் என்று.

இன விரோதத்துக்கு வழிவகுக்கும் “வெறுக்கத்தக்க பேச்சுக்களை” சட்ட விரோதமாக்கவும் மற்றும் மதத் தலைவர்கள் ,குடியியல் அமைப்புக்கள் என்பனவற்றை மன்னிப்பு, கருணை, சமரசம், மற்றும் குணப்படுத்தும் வழிகள் போன்றவற்றில் ஒருமித்துப் பணியாற்றும்படியும் ஆணைக்குழு மேலும் அழைப்பு விடுத்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளவற்றில் அநேகமானவைகள் ஒன்றும் புதியன அல்ல, மோதல் நடைபெற்ற காலம் முழுவதும் வித்தியாசமான பல்வேறு வழிகளிலும், சில சமயங்களில் அரசாங்கத் தலைவர்களாலும் கூறப்பட்டவைகள்தான்,

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரினால், இவர்களின் கண்காணிப்பின் கீழ்தான் இறுதியான சமாதான நடவடிக்கைகள் இடம்பெற்றன. உண்மையில் எல்.எல்.ஆர்.சி அறிக்கை வெளிப்படுத்தியிருக்கும் சிந்தனைகளும், கருத்துக்களும் அதன் முன்பாக தமது கருத்துக்களை சமர்ப்பித்த ஸ்ரீலங்காவாசிகளிடமிருந்து வெளிப்பட்டவைகள்தான்.

ஆனால் அவர்களின் குரல்கள் போருக்கு பிந்திய காலத்து தேசிய வாதத்துக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. ஸ்ரீலங்காவின் போருக்கு பிந்திய காலத்து மீள்கட்டமைப்பை தேடுவதற்காக நாடு தவறான பாதையில் பயணித்துக் கொண்டு அதேவேளை ஒரே சமயத்தில் யுத்தகால நிறுவனங்கள் மற்றும் நடவடிக்கைகளை தக்கவைத்துக் கொண்டும் அல்லது மேலும் வலுப்படுத்திக் கொண்டும் செல்லும் ஒரு காலகட்டத்தில், எல்.எல்.ஆர்.சி இந்த கூட்டு அனுபவத்தையும் மற்றும் நுண்ணறிவையும் உள்வாங்கி, மறுபடியும் மீள் உறுதி செய்திருக்கிறது.

ஸ்ரீலங்காவானது அதன் பாடங்களை நன்கு படித்தறிந்து மற்றும் அதன்; வேறுபட்ட சமூக மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வேண்டுமென்றால்,கடந்த காலத்துடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் ஒரு மாற்றுச் சிந்தனை அவசியம் தேவை என்பதை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பிரதிபலிக்கிறது.

நன்றி: த ஐலன்ட்

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share

Add comment


Security code
Refresh

தேடுக

உள்ளே

அரசியல்

எமது கருத்துக்கள் அல்லாதவை

செய்திகள்