Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சேனாதீர ஆற்றிய உரை

எமது கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டின் செயலாளர் சபையும், தலைவர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களே, இங்கு கூடியிருக்கும் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே வணக்கம்.

ஆரம்பத்திலேயே எமது மாநாட்டில் கலந்து கொள்வதோடு மாநாட்டிற்காக வாழ்த்துக்களை கொண்டு வந்திருக்கும் தேசிய, சர்வதேசிய இடதுசாரிய இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வுக்கு ஜேர்மன் மார்க்சிய லெனினியக் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான செயலாளர் ரோஸ் வொலன்டின்ஸ் சகோதரர், அதேபோல் இந்திய மார்க்ஸ் லெனினிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பி.ஜே.ஜேம்ஸ் சகோதரர், அதேபோல் இத்தாலிய ரிபோன்தியோ கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசக் கமிட்டி உறுப்பினர் ஜான் மாகோ பீசா சகோதரரும் இங்கு வருகை தந்துள்ளார்கள். 5 வது சர்வதேச லீக்கின் சார்பில் ஸ்ரீவன் மெகன்சி சகோதரர் வருகை தந்துள்ளார். அதே போல் சர்வதேச தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச சங்க உறுப்பினர் ஜெகதீஸ் சுந்தர சகோதரர் வருகை தந்துள்ளார். கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கியூபா நாட்டுத் தூதுவர் பிரவானா எலேனா ராமோஸ் ரொன்டிகார் சகோதரி இங்கு சமூகம் தந்து உள்ளார்.

எ மது நாட்டின்இடதுசாரிகள் மத்தியில் உங்களுக்கு தெரியும், எமது கட்சியை கட்டியெழுப்பும் நேரத்தில் இருந்து சகோதரத்துவத்துடன் அரசியல் இணக்கப்பாட்டுடன் அரசியல் தொடர்புடன் அரசியல் போராட்டத்துடன் வேலை செய்துகொண்டிருக்கும் அதிகமான சகோதரர்கள் இயக்கங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய சமாஜவாதி கட்சி சார்பில் சகோதரர் சிறிதுங்க ஜெயசூரிய, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் செந்தில்வேல் சகோதரர், இடதுசாரிய குரல் சார்பில் சகோதரர் லீனஸ் ஜயதிலக புரட்சிகர சோசலிச மையம் சார்பில் சகோதரர் வசந்த திசாநாயக்க சகோதரர், சிறீலங்கா பெரட்டுகாமி கட்சி சார்பில், தினுக சபுதந்திரி சகோதரர், அதேபோல் சிறிலங்கா சமாஜவாதி கட்சியின் மகிந்த தேவகே சகோதரர், பெக்சிஸ் சாமுலிக்க இயக்கம் சார்பில் சுமித் சாமிந்த சகோதரர் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தோழர் சிறிகரன் உட்பட சகோதர சகோதரிகள் மாநாட்டிற்காக சகோதரத்துவத்துடனான வாழ்த்துக்களுடன் இங்கு வருகை தந்துள்ளனர்.

அதேபோல் இச்சந்தர்ப்பத்தில், நாம் பெயர் குறிப்பிட்ட இடதுசாரிக்கட்சிகள் இயக்கங்கள் போன்று இடதுசாரிய கருத்தியல் கொண்ட இடதுசாரிய குழுக்களுடன் வேலை செய்யும் இடதுசாரிய செயற்பாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் இயக்கங்கள் பல தனிநபராக குழுக்களாக இயக்கங்களாக இச் சந்தர்ப்பத்தில் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் முதற்கண் அன்புடன் வரவேற்கின்றேன்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நாங்கள் நினைக்கிறோம் விசேடமாக இந்த இரண்டாவது தேசிய மாநாடு நடாத்தும் வேளையில் எமது ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சிறந்த இடம் எமது 1 வது மாநாடாகும். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் இந்த முதலாவது மாநாட்டில் இருந்து இன்றுவரைக்குமான 4 வருடங்களை நாம் கடந்து வந்திருக்கின்றோம். அந்த முதலாவது மாநாடு உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பிரிந்திருந்த தொகுதிவாரியாக பல்வேறுபட்ட சகோதரர்கள் வந்திருந்தனர். அவர்கள் உறுப்பினராக இருந்த இயக்கங்களில் மட்டுமல்ல, பல்வேறு இடதுசாரிகள் இந்த இடத்திற்கு அன்று வந்திருந்தனர். நாங்கள் "மக்கள் போராட்ட இயக்கத்தை" கட்டியெழுப்பும் வேலையை சில சகோதரர்கள் அறிமுகப்படுத்தி வைத்தனர். சகோதரர்கள் சிலர் சீன கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பழைய சகோதரர் என்று, அவர்கள் தனியாகவோ இல்லை இயக்கமாகவோ இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அதேபோல் 71 இன் சகோதரர்கள் இருந்தார்கள். 88, 89 போராட்டத்தில் இருந்த சகோதரர்கள் இருந்தார்கள். அதனால் இந்த மண்டபத்தில் நிரம்பி வழிந்தது முன்னிலை சோசலிசக்கட்சி என்ற இடதுசாரியக் கட்சி மட்டுமல்ல. இடதுசாரிய மணத்தை (வாசம்) உணர்ந்த இடதுசாரிய மனச்சாட்சியுள்ள இடதுசாரியம் தொடர்பான எண்ணம் கொண்ட இடதுசாரிய பங்களிப்பு தொடர்பாக இன்னமும் தமது மனச்சாட்சியுடன் போராட தயாராகும் மக்களால் இந்த மண்டபம் நிரம்பியது. உங்களுக் ஞாபகம் இருக்கும். இப்போது அந்த பேச்சின் பின் நாங்கள் பல வருடங்கள் கடந்து வந்துள்ளோம். இந்த இரண்டாவது மாநாடு கூடும் வேளை நாம் ஒரு கேள்வி கேட்போமானால் அன்று இங்கு கூடிய, அந்த இதயங்களின் எதிர்பார்ப்புகள், அந்த இளைஞர்களின், வரலாற்று இளைஞர்களின் பழைய இடதுசாரிய இளைஞர்களின், அப்படி இல்லை எனில் அந்த போராட்டகாரர்களுக்கு, நாம் நியாயத்தை வழங்கினோமா என்று. இல்லை எனில் அவர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான போராட்டத்தை நாம் எந்தளவுக்கு முன்னெடுத்தோம் என்று. எம் எல்லோருக்கும் தெரியும் அது ஒரு மின்னும் எதிர்பார்ப்பு, முன்னேற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புகள் அதேமாதிரி எங்களுக்கு நிறைவேற்ற முடியாது போனது. அந்த எதிர்பார்ப்புகளை அடையக்கூடிய வெற்றியை எம்மால் கொண்டுவர முடியாது போனது. உங்களுக்கு தெரியும்.

வர்க்க போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் இயக்கம் ஒன்றாக, அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறுபட்ட போராட்டங்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு, சவால்களுக்கு ஆரம்பத்திலேயே எமக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஆரம்பத்தில குறிப்பிட்டது போல் லலித் குமார் வீரரஞ்ச சகோதரர், குகன் முருகானந்தம் சகோதரர்கள் அவர்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள் யார்? அவர்கள் இந்த இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வடக்கில் மக்களுடன் புதிய இடதுசாரி அரசியலை ஆரம்பித்து, புதிய இடதுசாரிய இயக்கத்தின் மனச்சாட்சியை எடுத்துக்கொண்டு வேலைசெய்த ஆட்கள். அவர்களை கடத்தினர். எமது சகோதரர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் துரத்த ஆரம்பித்தனர். எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவர் மீதும் நெருக்கடிகளை பிரயோகித்தனர். எமது முதலாவது மாநாடு நடத்த ஓரிரு தினங்கள் இருக்கும்போது குமார் குணரட்ணம் சகோதரரையும், திமுது ஆட்டிகல சகோதரியையும் கடத்தினர். அப்படித்தான் எம்மைக் கவனித்தனர். அதனால் எமக்கு அடக்குமுறைக்கு மத்தியில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடக்குமுறையின் மத்தியில் எமது செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும், அதன் பின்னரும், விசேடமாக குமார் குணரத்தினம் சகோதரரின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் பிரச்சனை. எமக்கு அந்தப் பிரச்சனையில் தொடர்ந்து போராடும் நிலை ஏற்பட்டது. குமார் குணரத்தினம் சகோதரருக்கு 13 மாதங்களுக்கு மேல் சிறைவாசம் கிடைத்தது. அந்த போராட்டம் ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து கொண்டு நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். நீங்கள் அந்த இடத்தில் அந்த அடக்குமுறைக்கு முன் உங்களால் போராட முடிந்தது. நீங்கள் மட்டுமல்ல, இந்நாட்டின் இடதுசாரிய போராட்டத்திற்கு வேலை செய்யத் தயாரான இடதுசாரிய போராட்டத்தில் கைகோர்த்து போராட முன்வந்த அனைவரினாலும் அப்போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. அப்போராட்டத்தில் பின்வாங்காது, தளராது இறுக பிடித்துக்கொண்டிருந்தீர்கள். தோல்வி அடையமாட்டோம், வெற்றியை நோக்கி முன்னோக்கிச் செல்வோம் என்ற உறுதிப்பாட்டுடன் அப்போராட்டத்தில் இருந்தீர்கள். அந்தப் போராட்டத்தின் வெற்றி இன்று எமக்கு கிடைத்துள்ளது.

அதனால் சகோதர சகோதரிகளே எமக்கு ஒரு பக்கத்தில் எமது போராட்டத்தை அடக்குமுறைக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டது. அது மட்டுமல்ல உங்களுக்குத் தெரியும் இடதுசாரிய அரசியல் இயக்கம் என்ற நிலையில், நாம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நாம் இருந்த இயக்கத்தின் உள்ளே எமக்கு கருத்தியல் போராட்டம் இருக்கவில்லை. கருத்தியல் கருத்தாடல்கள் எமது இயக்கத்துள் இருக்கவில்லை. அந்தக் கருத்தியல் கருத்தாடல்கள் எமது இயக்கத்தில் உள்ள இயக்க நெருக்கடி, அரசியல் நெருக்கடியாக உருவெடுத்தது. ஆனால், அந்த அரசியல் நெருக்கடிக்குள்ளே விலகிச் சென்றதன் ஊடாக, அது பலவீனப்படுத்தப்பட்டதன் நாம் இன்று பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தோம்.

இடதுசாரிய இயக்கத்திற்கு நமது உயிரைப் போன்ற அரசியல் கருத்தியல் கருத்தாடல்களை நாம் பிடித்துக்கொண்டிருந்தோம். அவ்வாறு பற்றிப் பிடித்துக்கொண்டிருந்ததன் பலனே இன்று நாம் வந்திருப்பது. மார்க்சிய லெனினியம் தொடர்பாக எமது அடிப்படை மீண்டும் கட்டியெழுப்பிய வண்ணம் இன்று மீண்டும் ஒரு மாநாடு வரை நாம் வந்திருக்கிறோம்.

ஆனால், நாங்கள் முதற்தடவையாக, விசேடமாக எங்கள் இடதுசாரிய அரசியல் இயக்க, முதலாவது அனுபவமாக இடதுசாரிய இயக்கம் ஒன்று எவ்வாறு வேலை செய்வது நியாயமான போராட்டத்தை எவ்வாறு எமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வது அதற்காக பின்வாங்காது போராடுவது எவ்வாறு என்ற கலந்துரையாடலை நாம் உள்வாங்கியுள்ளோம் என உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அது மட்டுமல்ல தற்போது எங்களுக்கு தெரியும் ஒவ்வொருத்தரும் கடந்த காலங்களில் சிந்தித்துக் கொண்டிருந்தது என்னவென்று. ஓடி ஒளிதலும், விட்டுச் செல்லலுமே அது. அது மட்டுமல்ல சரியான இடதுசாரிய கோசத்தை எழுப்ப, சரியான இடதுசாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அநேகம் பேருக்கு முடியாது போனது. அவர்கள் சிந்தித்தது, வேறுவேறு கோசங்களை வீணான கதைகளை.

நாங்கள் மீண்டும் இடதுசாரிய இயக்கமாக வேலை செய்யும் போது, நாங்கள் செயல்ரீதியாக காண்பித்தோம். நாங்கள் சுயநலமில்லாது எவ்வாறு வேலை செய்வது என்பதை. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் விசேடமாக எமது நாட்டின் அரசியலில் மிக முக்கியமான, தீர்மானம் மிக்கதாய் அமைந்தது கடந்த ஜனாதிபதி தேர்தல் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடதுசாரிய முன்னணியாக தயாரானோம். இடதுசாரிய மாற்றீடாக அரசியல் கோசத்தை உரத்து கூறினோம். அது உணரப்படுவது சிலருக்கே. அந்தக் கோசம் ஒரு சிலருக்கே கேட்கக்கூடியதாய் இருந்தது. அந்தக் கோசங்களை சுவரில் ஒட்டியபோது அதைக் கண்டவர்கள் சிலரே. ஆனால் நாம் கூறினோம். புதிய தாராள நவலிபரல் முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரே மாற்றீடு சோசலிசம் மட்டுமே என்று. சோசலிசம் மட்டுமே என்ற கோசத்தை நாம் உரத்துக் கூறும்போது ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றாக வேலை செய்யக்கூடிய இடதுசாரிய சகோதரத்துவத்துடன் இந்த கருத்தாடலை நாம் முன்னெடுத்தோம். அதனால் நாம் கஸ்டமான நேரத்தில் அடியெடுத்து வைப்பது எவ்வாறு என்று எமது நாட்டு மக்களுக்கு எமது நாட்டு வர்க்கத்திற்கு எமது நாட்டு இடதுசாரிய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்ய ஆரம்பித்தோம். அது மட்டுமல்ல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் விசேடமாக எமக்கு கடக்க வேண்டியிருந்த அரசியல் போராட்டத்தினுள்ளே எமக்கிருந்தது ஒன்றுதான், தெளிவாக எமக்குள்ளேயே நடத்த வேண்டிய போராட்டம். தங்கியிருந்த இயக்கத்தினுள்ளே நாம் அதற்கு இரையானபோது, இயக்கம் பங்கீடு அரசியலுக்குள் விழும்போது, எங்களுக்கு நடந்ததைப்பற்றி கேட்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் எமக்குள்ளேயே போராட்டம் ஒன்று இருந்தது.

நாம் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல், நான் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல், நீங்கள் எவ்வாறு முதலாளித்துவப் பிடியில் இருந்து விடுபடுதல் என்று எங்களுக்கு ஒரு அரசியல் போராட்டம் ஒன்று இருந்தது. நாங்கள் நினைக்கிறோம் கடந்த 4, 5 வருடங்களாக நாங்கள் முயற்சித்த வண்ணம் இருந்தது நாமும் மாற்றத்தை உள்வாங்குவதோடு, நவலிபரல் முதலாளித்துவத்திற்கு எதிராக, போராடக்கூடிய, போராட்ட சம்பிரதாயமொன்றை எம்மிலும் கட்டியெழுப்பிக்கொண்டு புதிய இயக்கமொன்றை கட்டியெழுப்புதற்கு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான பாதையை அமைக்க.