Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

நீர் முகாமைத்துவத்திற்கு இஸ்ரவேல

இலங்கையில் நீர் முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது. இந்த தூதுக்குழுவை சந்தித்த நீர் முகாமைத்துவ மற்றும் நீர்பாசன அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, இலங்கையில் விவசாயிகள் நீரை விரயமாக்குவதால் அதனை முகாமைத்துவம் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவின் இந்தக் கூற்றோடு தண்ணீரை விற்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.

தற்போதைய நிலையில், தொழிற்சாலை கழிவுகளும், விவசாய ரசாயனங்களும் நீரில் கலப்பதனால், நீர் மாசடைந்திருப்பததோடு, அதன் விளைவாக வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் பரவலாகியிருக்கிறது. நாடு பூராவும் காணப்படும் நீர் மாசடைதலை குறித்து பிரச்சினைகளை ஆராயும் போர்வையில் நீரை விற்பதற்காக அரசாங்கம் நில அளவைப் படங்களை தயாரித்து வருகிறது. இஸ்ரேலிய பிரதிநிகள் இலங்கைக்கு வந்திருப்பது அதற்காகத்- தான் என்பது தெரிகிறது.

-போராட்டம்-05 (புரட்டாதி இதழ்)