Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

மருந்துப்பொருள் மாபியாக்களுக்கு எதிராக போராட ஒன்றுபடுவோம்.

மருந்துப்பொருள் விற்பனை மாபியாக்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும அப்பாவி மக்களை மீட்டெடுக்கின்ற பரந்துபட்ட போராட்டத்தின் தேவையை வலியுறுத்துகின்ற அதேவேளை மாணவர் இயக்கங்களும் சுகாதார சேவைத்துறைச் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்எடுத்துச் செல்லவுள்ளன.

புதிதாக பதவிக்கு ஏற்றுள்ள அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மருந்துக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்படுத்தும் என வாக்குறுதியினை வழங்கியிருந்தது. ஏழை ஏளிய நோயாளர்களை கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாது மருந்து விற்பனைக் கம்பனிகளின் இலாபமீட்டும் நோக்கத்துக்கு ஏற்புடையதாகவே புதிய மருந்து கொள்கை வரைவுகள் உருவாக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு தற்போதைய ஜனாதிபதி அன்று சுகாதார அமைச்சராக இருந்த போது நவலிபரல்வாத பொருளாதார கொள்கைக்கு ஏற்ப கொள்ளை இலாபம் ஈட்டிக்கொடுக்கும் வகையிலேயே மருந்துக் கொள்கை தயாரிக்கப்பட்டிருந்தது. மருந்துக் கம்பனிகளுக்கு சந்தையை அகலத் திறந்து விடுவதன் மூலம் இலாபச் சுரண்டலை அதிகரிக்கும் எண்ணத்திலேயே இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது.

எதிர்வரும் பெப்ருவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட மருந்துக் கொள்கையும் கூட இந்த அடிப்படையிலேயே இருப்பதற்கான சாத்தியமே உள்ளது. இந்த நிலமைகளைக் கருத்திற்கொண்டே சுகாதார சேவை உத்தியோகத்தர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து நோயாளிகளின் உரிமைகளுக்காக போராடவேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன் முதற்கட்டமாக எவ்வாறு தேசிய மருந்துக் கொள்கை வரைபு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பமாகஇருக்கின்றது.

இதுவிடயத்தில் ஆர்வம் கொண்டுள்ள பிரிவினர்களுடன் முதலில் இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும். அதன் பின்னர் பொதுஜன அபிப்பிராயத்துக்கான
கலந்துரையாடலாக இது விரிவுபடுத்தப்படும்.