Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சைட்டம் எதிர்ப்பு தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஆரம்பம்

மாலம்பே  சைட்டம்     நிறுவனத்தை தடை  செய்யுமாறு  அரசாங்கத்தை  வற்புறுத்தி  சைட்டம்  மாணவர்  மக்கள்  இயக்கத்தினால்  ஒழுங்கு  செய்திருக்கும்  தொடர்ச்சியான  உண்ணாவிரதம்  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையம்  முன்னாள்  இன்று (21)  ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்  உண்ணாவிரதத்தை  ஆரம்பிப்பதற்கு  முன் அவ் வியக்கம்    பாரிய  ஆர்ப்பாட்டத்தை  அவிவிடத்தில்  மேற்கொண்டது.

இந்த  எதிர்ப்பு   செயற்பாட்டிற்காக  பல்கலைக்கழக  மாணவர்கள் ,மாணவர்களின்  பெற்றோர்கள் ,  பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள் , வைத்தியர்கள் , தொழிற்சங்கங்கள் , கலைஞர்கள்  மற்றும்  சிவில்  செயற்பாட்டாளர்கள்  உட்பட  பல்வேறு  சக்திகள்  பங்கு  கொண்டுள்ளதோடு அவர்கள்  இந்த  உண்ணாவிரத  செயற்பாட்டிலும்  பங்களிப்பை  வழங்கி வருகிறார்கள்

பல சந்தர்ப்பங்களில்  பொலிஸாரினால்  இந்த  எதிர்ப்பு வேலைத்திட்டத்தை  நிறுத்துவதற்கு  முயற்சி  எடுத்தாலும் , எதிர்ப்பாளர்கள்  அதை கவனத்தில் கொள்ளாது  செயற்பட்டனர்.

தற்போது  சைட்டம்  நிறுவனத்திற்கு  எதிரான  சக்திகள்  வலுவூட்டப்பட்டு, ஒரே  கொள்கையின் கீழ்  ஒன்றுபட்டு  நாளுக்கு நாள்  தீவிரமடையும் எதிர்ப்பை ,  அடக்கியவாறு  சைட்டம்  நிறுவனத்தின்  பாதுகாப்பு  உட்பட  மக்கள்  உரிமைகளை  தனியார் மயப்படுத்தல்  கொள்கை காரணமாக  மட்டும்  அரசாங்கம்  மேலும்  நடவடிக்கை  எடுத்த வண்ணம்  உள்ளது.

 

நன்றி Lanka Views