Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்றைய சர்வதேச நிலைமைகள்

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை : 29,30-08-2014

Read more ...

தமிழ் மாணவர் மீதான தாக்குதல்: பல்கலைக்கழகங்களுள் இனவாதத்தைப் புகுத்தும் பாசிசத்தின் முயற்சி!

சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத பாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது.

இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர் பற்றிய கூட்டத்தையும் குழப்பித் தடுத்தனர். இவ்வாறான அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களுக்கு அரசாங்க உயர்மட்டத்தில் அனுசரணை வழங்கப்பட்டு வருவதுடன் பொலீசாரின் அரவணைப்பும் இருந்து வருவதையே காணமுடிகிறது. இவ்வாறான இன மத அடிப்படைவாதப் பாசிசக் குழுக்களின் வளர்ச்சியானது நாட்டில் உருவாகியுள்ள புதிய அபாயமாகும். இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஜனநாயக இடதுசாரி சக்திகளும் விழிப்புடனும் தூர நோக்குடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டுள்ளதாகவே எமது கட்சி உணர்கின்றது.

Read more ...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்! - புஜமாலெ கட்சி

பயங்கரவாதத் தடுப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வுமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படாதவரை அனைத்து பீடமாணவர்களும் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என மாணவர்கள் எடுத்துள்ள முடிவு முற்றிலும் நியாயமானதாகும். அம்முடிவுக்கு பலபல்கலைக்கழக சமூகம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் பலவகைப்பாதிப்புகளை பெற்றுநிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் முடிவை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வரவேற்கிறது.

Read more ...

வெலிவேரியா தாக்குதல் : ஊடக அறிக்கை!

சுத்தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் மக்களுக்கு அரசாங்கம் ராணுவ வேட்டுக்கள் மூலம் துப்பாக்கி ரவைகளை வழங்கி உள்ளது. வடக்குக் கிழக்கில் தமது இன உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் கேட்டு நின்ற மக்களின் உயிர்களைக் குடித்த அதே இராணுவம் இப்போது சுத்தமான குடிநீர் கேட்ட சிங்கள மக்கள் மீது பாய்ந்து துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளது.

Read more ...

கூடங்குளம் அணு உலை அபாயத்திற்கு எதிரான மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

கூடங்குளம் அணு உலை அபாயத்திற்கு எதிரான மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம். 17.11.2012 சனிக்கிழமை பகல் 11 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையம்  முன்பாக இடம் பெறவுள்ளது.  தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் குறிப்பாக வடபிரதேசத்தின் மக்களுக்கும் இக் கூடங்குளம் அணு உலை மின் நிலையத்தால் அபாயங்களே உருவாகும். எனவே இவ் அபாயம் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை மக்கள் நலன்களில் அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புக்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும் புதிய- ஜனநாயக மாக்சிச - லெனினிசக் கட்சி விடுக்கின்றது.

Read more ...

Subcategories