Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் சுஜித் குருவிட்ட பொலிசாரால் கைது!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் கட்சி உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி மீதான அடக்குமுறை தொடர்கின்றது. குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு குமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அவருக்கு இந்த நாட்டு குடியுரிமையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களிற்கும் அரச படைகளிற்கும் ஏற்ப்பட்ட முறுகல் நிலையில் அலுவலக கண்ணாடிகள் நொருங்கின.

கடந்த 23ம் திகதி ராஜகிரியவில் உள்ள சுஜித் குருவிட்டவின் வீட்டிற்கு குடிபோதையில் சென்றிருந்த பொலிஸ் குழு ஒன்று இவர்களை கைது செய்ய முயற்சித்து, கைது செய்வதற்கான ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில் பொலிசார் வெறும் கையுடன் திரும்பிச் செல்ல நேரிட்டது. இன்று காலை இது குறித்து வாக்கு மூலம் ஒன்றினை அளிப்பதற்கு இருவரும் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் புபுது ஜெயகொட மற்றும் சுஜித் குருவிட ஆகியோரை மருதானை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட அவர்கள் இலங்கை மக்களின் கவனத்தை பெற்ற ஒருவராக உள்ளார். இவர் தொலைக்காட்சிகளில் தோன்றி விவாதங்கள் மற்றும் தனிப்பட்ட பேட்டிகளில் இன்றைய அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்கி வருகின்றார். இது நாட்டு மக்களை விழிப்படைய வைத்துள்ளது. மேலும் நல்லாட்சி அரசு கூறும் ஜனநாயகம் முதலாளிகளிற்க்கானதே ஒழிய மக்களிற்க்கானதல்ல என்பதனை தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதுடன், மக்கள் போராட்டங்களை ஒருங்கமைத்து அவற்றிற்கு தலைமை தாங்கும் தலைவர்களில் ஒருவராகவும் இருக்கின்றார். இந்த நிலையில் இவரது செயற்பாடுகளை முடக்கி, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்கும் நோக்கில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

பிந்திய செய்தி

புபுது ஜாகொட மற்றும் சுஜித் குருவிட்ட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாளிகாகந்தை நீதவான் பிரசன்ன டி அல்விஸ் தலா 100இ000 ரூபா பிணையில் இவர்கள் விடுதலை செய்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

முன்னிலை சோசலிசக்கட்சியின் புபுது ஜாகொடவை கைது செய்ய குடிபோதையில் சென்ற பொலிசார்

மூன்று முக்கிய தலைவர்களை கைது செய்து போராட்டங்களை முடக்க நல்லாட்சி அரசு திட்டம்