Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

1971 ஏப்ரல் வீரர்களின் 42வது வருட நினைவுகூரல் லண்டன் (படங்கள் இணைப்பு)

இன்று லண்டனில் 1971 ஏப்ரல் எழுச்சியில் உயிர்நீத்த 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு லண்டனில் வெம்பிளியில் இடம்பெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக முன்னிலை சோசலிச கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்னம் கலந்து கொண்டு தியாகிகளை நினைவு கூர்ந்ததுடன் அந்த மாபெரும் தோல்வியிலிருந்தும் கடந்த கால அரசியல் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொண்டு போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதே இந்த வீரர்களின் தியாகங்களிற்கு பெறுமதி சேர்க்கும் எனக் குறிப்பிட்டார். மேலும் பல தோழர்களும் உரையாற்றினர்.

இலங்கையில் இரு தடவைகள் தெற்கில் உழைக்கும் மக்களிற்க்கான விடுதலையினை முன்வைத்து ஆயுதப் போராட்டம் நிகழ்ந்தது. முப்பது வருடங்களிற்கு மேலாக வடக்கு கிழக்கில் இன அடக்கு முறையிலிருந்து விடுதலை வேண்டி ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த மூன்று போராட்டத்திலும் லட்சத்திற்கு மேற்ப்பட்ட சிங்கள உழைக்கும் மக்களின் உறவுகளும் அதே அளவான தமிழ் மக்களும் அவர்களின் உறவுகளும் சிங்கள முதலாளித்து ஆட்சியாளர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டங்கள் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களின் ஓற்றுமையின்றி இடம்பெற்றதனால் முதலாளித்துவ ஆட்சியாளர்களினாலும் அன்னிய வல்லரசு சக்திகளாலும் கூட்டாக சேர்ந்து அழித்து ஒழிக்கப்பட்டன.

இன்று சம உரிமை இயக்கமானது அனைத்து இன உழைக்கும் மக்களின் இன ஜக்கியத்திற்க்காகவும் விடுதலைக்காகவும் உண்மையான ஒரு வேலைத்திட்டத்தினை முன்வைத்து ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கின்றது. இனவாதம், மதவாதம் இலங்கையில இன்று மிகவும் ஆழமாக சமூகங்களிடையே புரையோடியுள்ளது. இந்த நிலையில் இது மிகவும் கடினமான பணி. இதனை முறியடித்தாக வேண்டும். இதனை முறியடிக்காது ஒரு படி தானும் முன்னேற முடியாது. இதனை நிச்சயமாக தாண்டியாக வேண்டும். இந்த இன ஒற்றமையினை கட்டி எழுப்பியாக வேண்டும். ஏனெனில் இந்த ஆளும் முதலாளித்துவ அரசு இனவாதம் மற்றம் மதவாதம் கொண்டு மக்களை பிரித்து வைத்துக் கொண்டு மக்களை சுரண்டகின்றது. எந்த இனவாதம் மதவாதம் கொண்டு மக்களை அரசு பிரித்து வைத்திருக்கின்றதோ அதற்கு எதிராக அனைத்து இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து அரசிற்கு எதிராக போராடுவதன் மூலமே இந்த முதலாளித்துவ அரசினை வெற்றி கொள்ள முடியம். இது மிகவும் கடினமான பணி. இதற்க்காக உழைக்கும் மக்களின் விடுதலையினை வேண்டி நிற்போர் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

இன ஒற்றுமை கட்டி எழுப்பப்படுகின்ற போது நிச்சயமாக வடக்கு கிழக்கில் போராடியவர்களிற்க்காகவும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்ட அப்பாவி மக்களிற்க்காகவும் தென்பகுதிகளில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்படும். அதே போன்று வடக்கு கிழக்கில் தென்பகுதியில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போரிட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படும். இந்த நிலை தோன்றும் போது உண்மையான மக்களின் விடுதலைக்கான நாள் வெகுதூரத்தில் இல்லை எனலாம்.