Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு

எதிர்வரும் ஞாயிறு 15-01-2017 அன்று மாலை 2 மணிக்கு பாரிஸில் சமவுரிமை இயக்கத்தினர் பொங்கல் விழா கொண்டாட இருக்கின்றனர். உழைப்பில் ஈடுபடும் விவசாயிகள் தமது உழைப்பினையும் அதன் விளைவையும் கொண்டாடுவதே பொங்கல் விழாவாகும். இந்த வருட பொங்கல் விழாவினை மொழி, சமயம், சாதி வேறுபாடுகளை கடந்து இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் அனைவரையும் ஒன்றிணைத்த கொண்டாட்டமாக கொண்டாட பாரிஸ் சமவுரிமை இயக்கத்தின் கிளை அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது.

Read more ...

கைது செய்யப்பட்டும், சரணடைந்தும், கடத்தப்பட்டும் காணாமல் போனவர்கள் எங்கே? எங்கே? - யாழில் சமவுரிமை இயக்கம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரச படைகள், புலனாய்வு பிரிவினர், துணை ராணுவக்குழுக்களால்  கைது செய்யப்பட்டும்- கடத்தப்பட்டும் காணமல் போனோர் தொடர்பான தகல்களை வெளிப்படுத்த கோரியும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.பிரதான பேரூந்து நிலையம் முன்பாக சமவுரிமை இயக்கத்தினரால் ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. >

Read more ...

யாழில் நடைபெறும் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா படங்கள்

சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில்  யாழில் "எனினும் நாம் பறப்போம்" கலாசார விழா நேற்றைய தினம் 30ம் திகதி செப்டம்பர் ஆரம்பித்து நாளை 2ம் திகதி ஒக்டோபர் வரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழரின் பாராம்பரிய இசையான பறை முழக்கத்துடன் ஆரம்பித்த இந்த விழா; தெரு நாடகம், புகைபடக் கண்காட்சி, சினிமா என பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. விழா படங்கள் இங்கே...

Read more ...

“எனினும் நாம் பறப்போம்” கலாசார விழா

யாழ்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் அரசியல் கலாசார விழா எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி மற்றும் அக்டோபர் 1ம், 2ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்

1. புகைப்படக் கண்காட்சி - இனவாதம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிரான இரு புகைப்படக் காட்சிகள் உள்ளடக்கம்.

2. கார்ட்டூன் - கார்ட்டூன் காட்சிகள்

Read more ...

யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா!

யாழ்ப்பாணத்தில் சமவுரிமை இயக்கத்தின் மூன்று நாள் கலை விழா! 

"வசந்தத்தை தேடி" 

செப்டம்பர் 23, 24, 25 

நிகழ்வுகளுக்கான குறிப்பான நேரங்கள் மற்றும் இடங்கள் பின்னர் அறியத்தரப்படும் 

நிகழ்ச்சி நிரல் 

1.சமவுரிமை இயக்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் - கண்காட்சி 

2.இனவாதத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி 

3.இனவாதம் குறித்து சித்திரக் கண்காட்சி 

Read more ...

இன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்?

அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…

முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.

அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.

Read more ...

இன்னொரு அழிவிற்கு முன்

சில நாட்களுக்கு முன்பு யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசுபொருளாகியிருக்கின்றது. வழமைபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இனவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த சம்பவத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றாக சம உரிமை இயக்கம் கருதவில்லை. பல வருடங்களாக விதைக்கப்பட்டதைத்தான் இன்று அறுவடை செய்கின்றார்கள். எமது நாடு இனவாத எரிமலைக்கு மேல் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினால் அதில் தவறு கிடையாது. அது அடிக்கடி வெடிக்கின்றது. சமீபத்திய வெடிப்புதான் யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது.

Read more ...

"அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு" - யாழில் சம உரிமை இயக்கம் பிரச்சாரம்

யாழ். பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (04/07/2016) காலை முதல் யுத்தப் பாதிப்புகளுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும், இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி, சமவுரிமை இயக்கத்தினர் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அநேகமான மக்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

Read more ...