Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு (காணொளி)

கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீரவின் உரையின் காணொளியினை இங்கு பார்க்கலாம்.

“கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” - கருத்தரங்கு நிகழ்வு

கனடா ஸ்காபரோ நகரில் “கறுப்பு யூலையின் நினைவுகளும் இன்றைய நிலைமையும்” என்ற கருத்தரங்கு நிகழ்வு நேற்று 22 யூலை மாலை 4.30 மணிக்கு பார்மஸி அவனியு வில் நடந்தேறியது. சமவுரிமை இயக்கம் கனடா கிளையினால் இக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கருத்தரங்கு நிகழ்வு அழைப்பினை ஏற்று வருகை தந்தோரில் ஒரு பகுதியினரையும் அங்கு முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர் சேனாதீர உரையாற்றுவதையும் இங்கு புகைப்படங்களில் நீங்கு காண்கிறீர்கள்.

தோழர் சேனாதீரவின் பேச்சின் ஒரு சிறு பகுதி காணொளியாக இங்குள்ளது.

Read more ...

இனவாதிகளின் கட்டுத்துவக்கு யாரைக் குறி வைக்கிறது?

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே, சகோதர, சகோதரிகளே, மீண்டும் பற்றவைக்கத் துடிக்கும் இனவாத தீயின் கொடிய மரணச் சுவாலை இலங்கை சமூகத்தை தொட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான துரதிஷ்ட நிலைமையை தோற்கடிப்பதற்கு நீங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கருத்தாடலுக்கு அழைப்பு விடுவதற்காக, அதற்காக அனைத்து மக்களிடையே, பரந்த மக்கள் ஒன்றிணைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், அதன் ஆரம்பப் படியாக இந்த துண்டு பிரசுரத்தை உங்கள் கைகளுக்கு கிடைக்க, நாங்கள் சிந்தித்தோம்.

 

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

Read more ...

கேப்புலாபுலவு மக்களில் காணிகளை - வாழ்விடத்தை திருப்பிக்கொடு - போராட்டத்துக்கான அழைப்பு .

மவுரிமைஇயக்கம், கேப்புலாபுலவு மக்களில் காணிகளை - வாழ்விடத்தை திருப்பிக்கொடு ! அனைத்து இராணுவதளங்களையும் அகற்று ! என்றகோசங்களை - கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டமொன்றை நாளை 27.06.2017 அன்று கொழும்பு கோட்டை புகையிரத்து நிலையத்துக்கு முன்னால்  நடத்தவிருக்கிறது

Read more ...

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடு!

தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.

Read more ...