Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்! - கனடா நிகழ்வுச் செய்தி

கனடா சமவுரிமை இயக்கம் முன்னெடுத்த இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்யக் கோரும் போராட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக அமைந்த ஊடகவியலாளர் மகாநாடு ஸ்காபுரே சிவிக் மண்டபத்தில் மாசி மாதம் 27ம் திகதி மாலை மூன்று மணியளவில் நடாத்தப்பட்டது. இலங்கையிலும் புலம்பெயர் ஜரோப்பிய நாடுகளிலும் இப்போராட்ட நடவடிக்கைகள் தெடர்ச்சியாக நடத்தப்பட்டுகொண்டிக்கும் இவ்வேளையில் புலம்பெயர் இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூக செயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.

கூட்டம் கனடா சமஉரிமை இயக்க பொறுப்பாளர் நேசன் ஒழுங்குபடுத்தினார். ஆரம்பத்தில் லண்டன் சமஉரிமை இயக்க செயற்பாட்டாளரான சீலன் இலங்கையில் நடைபெறும் நடவடிக்கைகள் மற்றும் ஜரோப்பிய செயற்பாடுகள் பற்றி விளக்கினார். அத்தோடு தற்போதய இலங்கை அரசும் கடந்த அரசும் எவ்வகையில் அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றன என்பதை எடுத்துக் கூறினார்.

அடுத்து கனடா சமஉரிமை செயற்பாட்டாளரான சமிந்த தனது உரையில் எதிர்கால நடவடிக்கைகளை எடுத்துக்கூறியதுடன் அதற்கான ஆதரவினை பார்வையாளர்களிடமும் ஊடகவியலாளர்களிடமும் கோரினார். மேலும் சிறைக்கைதிகளின் நிலவரங்களையும், அனாதரவான கைதிகள் அவர்களின் விடுதலைக்கான தாங்களே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் சிறைக்கைதிகளின் புள்ளிவிவரம் விடுவிக்கப்பட வேண்டிய அவசியத்தினையும் கனடிய செயற்பாட்டாளரான விஜி முருகையா தெளிவுபடுத்தினார்.

கடைசியாக சம உரிமை இயக்க தோற்றத்தினையும் அதன் அவசியத்தையும் சபேசன் கூறினார்.  கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் "யாவரும் கேளிர்" என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.