Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்!" - டென்மார்க் போராட்டம் (படங்கள்)

இன்று 12-12-2015 காலை 10 மணி முதல் டென்மார்க், கொல்ஸ்ரபரோவ் நகரில் சமவுரிமை இயக்கம் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை நடாத்தியிருந்தது. இப் போராட்டமானது "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!, சகல காணாமலாக்குதல்கள் கடத்தல்கள் குறித்த தகவல்களை மக்களிற்கு வெளிப்படுத்து!, அனைத்து இலங்கை பிரஜைகளின் பிரஜா உரிமையினை வழங்கு!, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்!, குமார் குணரத்தினத்தை உடன் விடுதலை செய்!"  ஆகிய கோசங்களை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.

கொல்ஸ்ரபவோவ் நகருக்கு வந்திருந்த டெனிஸ் மக்களின் கவனத்தை இந்த போராட்டம் பெரிதும் ஈர்த்திருந்தது. டெனிஸ் மொழியில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வாங்கி சென்றனர். பலர் நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருப்பது குறித்து ஆச்சரியப்பட்டனர்.