Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்! – யாழ் கருத்தரங்கம் (படங்கள்)

சமவுரிமை இயக்கத்தினரால் நேற்று மாலை 3:30 மணியளவில் யாழ் நூலகத்தில் அமைந்துள்ள உணவுச்சாலை கேட்போர் கூடத்தில்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கம் இடம்பெற்றது.

சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் சந்திரகுமார் கபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ரவீந்திர முதலிகே, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி நிவாஸ், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சமவுரிமை இயக்க செயற்பாட்டாளர்கள் யூட் சில்வா புள்ளே, தர்மலிங்கம் கிருபாகரன், பூபாலபிள்ளை சந்திரகுமரன் உட்பட அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியளார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் நிபந்தனைகள் ஏதுமற்ற தமது விடுதலைக்காக உண்ணாவிரதத்தினை மேற்க்கொண்டிருந்தனர். அவர்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள், அரசியல்வாதிகள், கைதிகளின் குடும்பத்தினர்; கைதிகளின் விடுதலைக்காக பல கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு கைதிகள் விடுதலைக்கான நெருக்கயினை உருவாக்கியிருந்தனர். இந்த உணர்வு பூர்வமான போராட்டத்தை கலைக்கும் செயற்பாடாக எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியிடம் இருந்து அரைகுறையான பதிலை பெற்று கைதிகளை சந்தித்து போராட்டத்தை நிறுத்தி குழப்பினார்.

மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்ட விடுதலை குறித்து கடிதம் எழுதி அரசியல் கைதிகளின் போராட்டத்தை குழப்பியதுடன் அவர்களை குற்றம்சாட்டப்பட்டவர், குற்றமற்றவர்கள் என பிரித்து அரசின் நோக்கங்களிற்கு உதவி செய்தனர்.

எமது கோரிக்கை அனைத்து அரசியல் கைதிகளும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே. இது மட்டுமே உண்மையான குற்றவாளிகளை இனங்காணவும் இனங்களிற்கு இடையே ஜக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க வழிசமைக்கும் என அங்கு உரையாற்றி ரவீந்திர முதலிகே தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் புரண விடுதலைக்காக தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுப்பது என்ற உறுதி மொழியுடன் கூட்டம் நிறைவுற்றது.