Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! - யாழில் கருத்தரங்கு

யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் உருண்டோடி விட்டன. யுத்தத்தை முன்னின்று நடாத்திய புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் சுதந்திரமா நடமாடுகின்றனர். இறுதி நேரத்தில் சரணடைந்த பலர் புனர்வாழ்வு முகாம்களிற்கு அனுப்பப்பட்டு விடுதலை பெற்றுள்ளனர். ஆனால் புலிகளுக்கு உதவியவர்கள், புலியாக இருக்குமோ என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள்  மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களிற்க்காக கைது செய்யப்பட்ட மலையக-முஸ்லீம் - சிங்கள  செயற்பாட்டாளர்கள் எந்த நீதியும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் ஏகபோக தலைமை தாம் தான் என மார்தட்டும், எதிர்கட்சியான திரு சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழர் கூட்டமைப்பு, கைதிகள் விடயத்தில் பேரினவாத அரசிற்கு  எத்தகைய அழுத்தங்களையும் கொடுக்காது; பாராமுகமாக இருப்பதுடன் மைத்திரி - ரணில் அரசுடனான இணக்க அரசியலின் காரணமாக கைதிகள் போராட்டத்தை மழுங்கடிக்கும் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

கைதிகளின் விடுதலையினை துரிதப்படுத்த அரசிற்கு அழுத்தம் கொடுக்கு முகமாக யாழில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 4ம் திகதி கருத்தரங்கம் இடம்பெறுகின்றது. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அணிதிரளுமாறு வேண்டுகின்றோம்.

இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!

நவம்பர் 04 (04.11.2015), யாழ் பொது நூலக உணவக மண்டபத்தில், பி.ப 03 மணிக்கு

சம உரிமை இயக்கம்