Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கத்தினது “வசந்தத்தை தேடுகின்றோம்” - லண்டன் நிகழ்வு

எதிர்வரும் சனி 25ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு லண்டன் வெம்பிளியில் சமவுரிமை இயக்கத்தின் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில்

“இவைகள் யாழின் பனித்துளிகள் அல்ல” என்னும் தலைப்பில் புகைப்பட கலைஞர் நயனகாரி அபயநாயக்கேயினது படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இது போருக்கு பின்னான வடபகுதி மக்களின் வாழ்க்கை அவலங்களை தென்பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு முன்முயற்சி......

“மீளும் ஞாபகங்கள்” ஆவணப்படம் - இலங்கை முதலாளித்துவவாதிகளும் ஆட்சியாளர்களும் எவ்வாறு இனவாம் மதவாதம் கொண்டு பல சகாப்தங்களாக இனங்களை பிரித்தாள்கிறார்கள் என்பதனை விபரிக்கின்றது...

“போரும் சமாதானமும்” பாடல் காட்சி – உலக ஏகாதிபத்தியவாதிகள் எவ்வாறு சமாதானம், மனித உரிமை என பேசிக்கொண்டு மறுபுறத்தில் யுத்தத்தை நடாத்த்தி உலக மக்களின் செல்வங்களையும், வளங்களையும் கொள்ளையிடுகின்றனர் என்பதனை விபரிக்கின்றது......

பகிரங்க கூட்டம்:

பேச்சாளர்கள்:    தோழர் சபேசன் நாகலிங்கம் (பிரித்தானிய சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்)

                                        தோழர் நியூட்டன் மரியநாயகம் (சமவுரிமை இயக்கத்தின் ஜரோப்பிய பிரதிநிதி)

                       தோழர் குமார் குணரத்தினம் (முன்னிலை சோசலிச கட்சியின் பிரதிநிதி)

 

இறுதியாக சமகால, எதிர்கால அரசியல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்

இடம்:        Chalkhill Community Centre, 113 Chalkhill Rd, Wembley, Greater London HA9 9FX

          (Two minutes walk form Wembley Park Underground station - Jubilee and Metropolitan Lines)

தொடர்வுகளுக்கு: 07951 322 712 / 0753 410 4466 / 0773 861 3118

 

சமவுரிமை இயக்கம்

பிரித்தானிய கிளை