Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடுத்து என்ன அதிசயம் நிகழ்த்தப்போகின்றன தமிழகக்கட்சிகள்!!

தமிழக மக்களின் உணர்வுகளை தமது கட்சியிருப்பாக மாற்றுவதற்காகவே ஈழத்தமிழர் இன்னல்களை காலத்துக்காலம் கையிலெடுத்தவர்கட்கு, இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு கிருஸ்ணா அளித்துள்ள பதில்---

 

நிதானித்துத்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், இலங்கையுடன் நமக்கு வரலாற்றுப் பூர்வமான உறவு நட்பு உள்ளது. அது பாதிக்கப்பட்டு விடக் கூடாது. அதேபோல இலங்கையில் நடந்து வரும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. பிரச்சினை மேலும் பெரிதாகி விடக் கூடாது. கசப்புணர்வு அதிகரித்து விடக் கூடாது  இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்வோருக்கு சைக்கிள் கொடுத்தது, வீடு கட்டிக் கொடுத்தது ஆகியவை குறித்து புள்ளி விவரத்துடன் நீண்ட பட்டியலையும் வாசித்தார்.

இதற்கு வமைபோலவே வெளிநடப்பு, நகல்கிழிப்பு என அதிமுக, திமுக செய்வதால் என்ன புதிதாய் நடந்து விடப்போகிறது. அன்றேல் ஆட்சி மாறும் வரை முள்ளிவாய்க்காலில் தாக்குப்பிடிக்கச்சொல்லி புலிகட்கு இராஜதந்திரம் கற்பித்த உணர்ச்சிப்பெருமகன் கோபால்சாமி சொல்வது போல்--தமிழினத்திற்கு துரோகம் செய்த குற்றத்தில் காங்கிரஸு்ககும் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. காங்கிரஸின் இந்த முடிவு தமிழகத்தில் இருந்து அந்த கட்சியையே துடைத்து எறிந்து விடும் என்று எச்சரிக்கிறேன்.----என்பதால் என்ன நடந்துவிடப்போகிறது.


இலங்கையில் ஆட்சி மாறினாலும் சரி, இந்தியாவில் ஆட்சி மாறினாலும் சரி இன்னுமோர் மகிந்தவும் மன்மோகன்சிங்கும் வரத்தான் போகிறார்கள்.

 --முரளி 14/03/2012