Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

ராசா கைது - உங்களில் தனியார்மயத்தை ஆதரிக்காதவர் யாரோ அவர்கள் மாத்திரம் பேசக் கடவர்கள்

ராசா கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் மீடியாக்களில் பரபரப்புக்கு இன்னும் ஒரு இரண்டு வாரத்திற்காவது பஞ்சமிருக்காது. ஆனால் கபில் சிபல் வாடிக்கையாளர்களை மிரட்டத் தொடங்கி விட்டார். ஊழல் அது இது என்று பேசினால் இனிமேல் இன்கம்மிங்கிற்கும் பீஸ் வாங்குவேன் என்று அந்தக் காலத்தை நினைவுபடுத்த துவங்கி விட்டார்.
தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதே தவறு என புத்தகம் போட்ட பத்ரி ஊரைக் கூட்டுகிறார்.

தனியார்மயம் தவறு என்பதை அதிகார வர்க்கத்தின் அங்கமான நீதிமன்றமே ஓரளவு புரிய நேர்ந்திருக்கும் இந்த தருணத்தில் வின்-வின் முறைப்படி எப்படி தண்ணீரை நாசமாக்கியாவது நொய்யலையும் காப்பாற்றி, சாயப்பட்டறையையும் காப்பாற்றுவது என்பதற்கு ஆலோசனை கூறி நடுப்பக்க கட்டுரை வரைகிறது தினமணி.

 

யாருக்கு ஊழலை பற்றி பேச தகுதி உள்ளது எனக் கேட்டால் டிராபிக் ராமசாமி வருகிறார். அல்லது ஜெயாவின் அரசியல் தரகர் சோ ராமசாமி வருகிறார். போதாத குறைக்கு ஹவலா கறை படாத பாஜக அம்பிகள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் பத்தாது என்பதற்காக வெள்ளையாக மட்டுமே சினிமாவில் பணம் வாங்கிப் பழக்கப்பட்ட விஜயகாந்த் வருகிறார். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சொல்வது மேலே சொன்ன இயேசுவின் வாசகத்தைத்தான். நேற்று ஊழல் எதிர்ப்பு கூட்டணியில் சிபிஐ தோழர்களுடன் பாஜக வும் இணைந்து காங்கிரசின் காமராசர் அரங்கத்தில் ஸ்பெக்ட்ரம் பற்றி கூட்டம் போட்டார்களாம்.

1600 கோடிக்கு ஏலம் எடுத்து அதனை பதினாறாயிரம் கோடிக்கு விற்ற டாடாவுக்கு என்ன தண்டனை எனக் கேட்டால் அதற்கு பெயர் வியாபாரம் அல்லது தனிமனித உரிமை என்கிறார்கள். நட்டம் அடைய விட்டவர் ராசா என்றால் அதனை அடைய வைத்தவன் டாடா இல்லையா. டாடாவை கைது செய்தால் டிசிஎஸ் கம்பெனியில் கூட யாரும் கொதித்திருக்க மாட்டார்கள்தானே. ஏன் அதிகார வர்க்கத்திற்கு ராசா மாத்திரம் கண்ணிற்கு தெரிந்தார். அரசு என்றால் என்ன என்று இப்போது புரிந்திருக்குமே, !

இந்த ஜனநாயக பாதைக்கு மாவோயிஸ்டுகள் அல்லது நக்சல்பாரிகள் வந்து சேர வேண்டும் என்றுதான் ப•சி கூறுகிறார். அட்டர்னி ஜெனரல் வாகன் வாதி சொல்கிறார், ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தாமஸ் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட ஊழல் விபரம் தேர்வுசெய்த பிரதமர், ஜனாதிபதிக்கு தெரியாதாம். ப•சி சொல்கிறார், அதெல்லாம் ஏற்கெனவே பேசிதான் முடிவெடுத்தோம் என்று. நன்றாக தெரிந்த இந்த முரண்பட்ட சொற்களில் உள்ள பொய்யை சொன்னதற்காக அட்டர்னி ஜெனரலுக்கோ பசிக்கோ யார் தண்டனை கொடுப்பார்கள். அல்லது கோரத்தான் போகிறார்கள். இந்த லட்சணத்தில் சாந்தி பூஷன் சொல்கிறார் நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் ஏதேனும் அபராதம் விதித்துவிட அரசை அனுமதிக்காதீர்கள் என்று. இதனை உச்சநீதிமன்றத்தில் மனுவாகவும் அளித்தார். கம்பெனிகள் சார்பாக காங்கிரசின் வக்கீல்கள் வரத் துவங்கினர். பிஜேபி வக்கீலும்தான்.

வாழ்க ஜனநாயகம்.
ஜெய் ஹிந்த்.

-http://powrnamy.blogspot.com=