Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

தன் வினை தன்னைச் சுடும்! அமெரிக்க வினை அமெரிக்காவை சுடுகின்றது!

தன்வினை தன்னைச் சுடும்!

அமெரிக்க வினை அமெரிக்காவை சுடுகின்றது!

ராஜபக்சேயும் போர்க்குற்றவாளி விக்கி லீக்ஸ்!

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதன் மூலம் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிவந்துள்ளன. பல்வேறு நாடுகளைப் பற்றி அமெரிக்கா வைத்துள்ள மோசமான அபிப்பிராயம் பிற நாடுகளின் உள்விவகாரங்களை அமெரிக்கா வேவு பார்ப்பது போன்றவை வெட்டவெளிச்சமாகி வருகின்றன. இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சர்ச்சைக்குரிய ஜூலியன் அசேஞ்ச்

பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் இணையதளம் தான் "விக்கிலீக்ஸ்'. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும் இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதில் கைதேர்ந்தவருமான ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அட்டூழியம் குறித்த 90 ஆயிரம் ஆவணங்கள், ஈராக்கில் அமெரிக்க அட்டூழியம் குறித்த நான்கு லட்சம் ஆவணங்கள் இதுவரை இந்த இணைய தளத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று பொது மக்களைச் சுட்டுக் கொன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட சாரா பாலின் என்பவரின் இ-மெயிலில் இருந்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதனால் எரிச்சல் அடைந்த அமெரிக்கா "விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை துரத்த ஆரம்பித்தது. சமீபத்தில் அவரைக் கைது செய்வதற்கு சுவிட்சர்லாந்து கோர்ட் ஒன்று உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக ஜூலியன் சமீபத்தில் தெரிவித்தார். அவற்றை வெளியிடக் கூடாது எனக் கூறிய அமெரிக்கா அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மிரட்டலும் விடுத்தது.

ஆவணங்கள் கிடைத்தது எப்படி?

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்த அமெரிக்கப் படைத்தளத்தில் பிரேட்லி மேன்னிங் (22) என்ற வீரர் அமெரிக்க தூதரகங்களின் இணையதளங்களில் இருந்து மிக ரகசியமாக இந்த விவரங்களை "சிடி'" யில் பதிவு செய்தார். இதற்காக ஒரு நாளில் 14 மணிநேரம் செலவிட்டுள்ளார். இப்படி எட்டு மாதங்களுக்கும் மேல் செலவிட்டு இவ்விவரங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 1.6 கிகாபைட்ஸ் கொண்ட அனைத்தையும் ஒரு "தம்ப் டிரைவ்' -ல் பதிவு செய்து "விக்கி லீக்ஸ்'" இணையதளத்திற்கு அளித்துள்ளார். ஏழு மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இவர் 2011ல் கோர்ட் விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கிறார்.

இரண்டுலட்சம் தகவல்களின் முக்கியமான சில

ராஜபக்சே போர்க்குற்றவாளி விக்கி லீக்ஸ்!

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதர் அமெரிக்காவுக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கை வெளியானது. தற்போது உலகத்தையே பரபரப்பாக்கிக் கொண்டிருக்கும் விக்கி லீக்ஸ் இந்த அறிக்கையை அம்பலமாக்கியுள்ளது.

அந்த அறிக்கையில் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும் அவரது சகோரர்களும் பொன்சேகாவும் போர்க்குற்றத்திற்கு பொறுப்பு ஆவார்கள் என்றும் குறிப்பிடப்பிட்டுள்ளார் அமெரிக்க தூதர்.

ராஜபக்சேவும் அவரது சகோதரர்கள் இருவரும் போர் குற்றவாளிகள்: அமெரிக்கா

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவும் அவரது சகோதரர்கள் இருவரும் போர்க் குற்றவாளிகள் தான் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஜனவரியில் அனுப்பிய ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

சர்வதேசத்தின் முக்கிய நிகழ்வுகளில் சில

அல்-குவைதா பற்றி முஷாரப் தந்தார் தகவல்: "விக்கி லீக்ஸ்'

மும்பை தாக்குதலில் தொடர்புடைய 7 பாகிஸ்தான் தீவிரவாதிள் ஸ்பெயின் நாட்டில் கைது.

ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்த அதி நவீன துப்பாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்தனர்

ஹிலாரி உத்தரவிட்டது என்ன? "விக்கிலீக்ஸ்' ஆவணங்கள் தகவல்

வடகொரியாவின் அழிவை விரும்பிய சீனா: "திடுக்' தகவல்

இந்திய அதிகாரிகளுடன் பேசிய தகவல் : "விக்கிலீக்ஸ்' தகவல் வெளிவராத மர்மம்

அமெரிக்காவின் மீதான தாக்குதலா: திசை திருப்ப முயற்சி : ஜூலியன் மீது சதி வழக்கு பாயுமா?

அமெரிக்காவில் பள்ளியில் புகுந்து 23 மாணவர்கள் சிறைபிடிப்பு: துப்பாக்கி முனையில் மிரட்டல்

ஏமன் குண்டு வெடிப்புக்கு அல்கொய்தா பொறுப்பேற்பு

இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்துக்கு தகுதியுடன் இருப்பதாக இந்தியா தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்தை "விக்கி லீக்ஸ்' இணைய தளம் வெளியிட்டுள்ளது.!

இந்தியா சம்பந்தப்பட்ட ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடக்கூடும் என்பது குறித்து இந்திய அதிகாரிகளுடன் பலமுறை பேசியிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பலமுறை பேசியுள்ளோம். இந்தியாவைப் போல பல்வேறு நாடுகளுடனும் பேசியுள்ளோம். வரும் நாட்களில் இதுகுறித்து தொடர்ந்து பேசுவோம் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி தெரிவித்தார். லட்சக்கணக்கான அமெரிக்க ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருவதை முன்னிட்டு வெளியிடப்படாமல் உள்ள ஆவணங்கள் குறித்து இந்தியாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்கிலீக்ஸிடம் எத்தகைய ஆவணங்கள் உள்ளன என்பதும் அது எந்தமாதிரியான திட்டங்கள் வைத்துள்ளது என்பதும் தெரியவில்லை. எங்களது நிலையை தெளிவுபடுத்திவிட்டோம். அந்த ஆவணங்கள் கண்டிப்பாக வெளியிடப்படக்கூடாது என குரோலி தெரிவித்தார்.

250,000 ஆவணங்களில் தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 3000 ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவைகளை விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிடவில்லை. இத்தகைய ரகசிய ஆவணங்கள் வெளியானால் நாடுகளிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்று பி.ஜே. குரோலி தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் மீது குற்றப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள அமெரிக்கா முடிவு! ரகசிய தகவல்களையும் பாதுகாப்பு ரகசியங்களையும் அதிகாரப்பூர்வமில்லாமல் வெளியிடுவதை ஏற்க முடியாது. விக்கி லீக்ஸ் இணயதளம் வெளியிட்டுள்ள தகவல்கள் மனித உரிமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ரகசிய தகவல் பரிமாற்றம் மற்றும் உலக நாடுகளிடையே உறவு பரிமாற்ற தொடர்புகளுக்கு இது பெரிய சவாலாக அமைந்துள்ளது என்கின்றது அமெரிக்கா

நீங்கள் மேலே சொல்கின்ற அத்தனை கைங்கரியங்களைத் தாங்களும் தங்கள் கூட்டாளிகளும் செய்ததின் விளைவே, இவ்வுலகில் இவ் இடர்பாடுகள். மூன்றாம் உலக நாடுகளின் அவலமான அரசியல்,பொருளியல், போர்ச் செயற்பாடுகள், இன-மத-மொழியிலான முரண்பாடுகளிலான் அடக்குமுறைச் செயற்பாடுகள். தாங்கள் தலை நுழைக்காதது இவ்வுலகில் எதுவுண்டு. இவ்வுலகின் ஆயுளே அற்பமாவதே தங்களால் தானே.