Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

பொறுக்கி அரசியல்!

பழுத்த 50-வருட யூ.என்.பி. அரசியலாளர் அப்துல் காதர்!

அவருக்கு 3-மாதங்களுக்கு முன் மகிந்தா-மோசமானவர்-பயங்கரமானவர்! பாசிச-சர்வாதிகாரி!

இப்போ சர்வலோக சாந்த-சற்சொருபவதி! “சர்வாதிகாரமற்ற” ஐனநாயகவாதியாம்!ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.

 

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கைத் தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இவ்வாறு  இலங்கையின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் கண்டி தொகுதி பாராளுமன்ற எம்.பி.யான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்

நான் இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியில் 50 வருடம் இருந்திருக்கிறேன். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் ராஜபக்சேவின் சுதந்திர கட்சியில் இணைந்தேன்.

இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 1 வருடத்திற்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பகுதிகள் சரிசெய்யப்பட்டு தமிழர்கள் அந்த பகுதியில் குடியமர்த்தப்படுவார்கள்.

இதற்காக இந்திய அரசு பெருமளவில் உதவி செய்து வருகிறது. குறிப்பாக தமிழர்களை மீள்குடியமர்த்துவதில் தமிழக அரசு பெரும் உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து எந்த மந்திரியாக இருந்தாலும் எம்.பி.யாக இருந்தாலும் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமையை பார்வையிட வரலாம். அவர்களை தகுந்த பாதுகாப்புடன் நான் இலவசமாக அழைத்துச் செல்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் முகாம் இருக்கும் இடத்தில் காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.

இலங்கையை சேர்ந்த அனேகமான சிங்களவர்கள் தங்களுக்கு நோய் ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சென்னைக்கு தான் வருகிறார்கள். அவர்கள் தமிழர்களை உறவினர்களாக தான் நினைக்கிறார்கள்.

தமிழக மக்கள் நினைப்பது போல இலங்கை அதிபர் ராஜபக்ச மோசமானவர் இல்லை. அவர் இலங்கை தமிழர்களுக்காக கடுமையாக உழைத்து வருகின்றார்!

“தமிழகத்தில் உள்ள மக்கள் முள்வேலி முகாம் என்றால் கொடுமையான இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் முகாம் இருக்கும் இடத்தில் காட்டு விலங்குகளினால் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த முள்வேலி.”

முட்கம்பி வேலி ஏன் போடப்பட்டது?.  மே-18-ன் பின் தமிழ் மக்களை அகதி-மிருகங்கள் ஆக்கி அவர்களை ஓடாமல் வைத்திருப்பதற்கே!

“தமிழ்மக்க்ள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள், வன்னி இரத்த ஆறு ஓடியும்,-பிணங்காடுமாயும் உள்ளது எஞ்சியவர்கள் முட்கம்பி வேலிக்குள்” அவர்களை சென்று பார்ப்பதற்கு எங்களுக்கு (எதிர்க்கட்சி) அனுமதியில்லையென நீலிக்கண்ணீர் வடித்தவர்கள்தான் இந்தக் காதரும்,- யூ.என்.பியும்!

அப்போ இக்காட்டு விலங்குகள்-முட்கம்பிவேலி, பாதுகாப்புப் பற்றிய கதைகள் ஓன்றுமில்லையே? “மக்களை பாதுகாக்க நிறுத்தப்பட்ட உந்த பல்லாயிரக்கணக்கான அரச விலங்குகளை”த் தாண்டியா காட்டுவிலங்குகள் முகாமிலுள்ள மக்களைப் போய் தாக்கும்? காதர் காதிலை பூ வைக்கிறார்! யூ.என்.பி. அரசியல் எப்போதும் பூவைப்பபு அரசியல்தான். அத்துடன் சிலதுகள் சீன வாந்தியும் எடுக்குதுகள்! பண்டாரநாயக்கா மண்டபம், அம்பாந்தோட்டை துறைமுகம் என “அங்கொடைக் கதை” சொல்லுதுகள், -தமிழ்த்தேசியத்தின் சிற்சிலதுகள்.- அதற்கு யூ.என்.பி.யையும் துணைக்கு அழைக்குதுகள்.

*************************

1)   சீனாவின் ஆதிக்கத்தை ஐ.தே.கட்சி உறுதிப்படுத்தியதனால் இலங்கை அரசாங்கம் பாரிய சங்கடத்தில்...

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு சென்றிருக்கும் நிலையில் பாரிய சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துறைமுகப் பணிகளில் பல சீன கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.  இது சீனாவின் ஆக்கிரமிப்பை எடுத்துக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2)   பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்துடன் உருவாகியது 71ம் ஆண்டு கிளர்ச்சி! அம்பாந்தோட்டைத் துறைமுகத்துடன் இராணுவச் சதியை உருவாக்குமா

சமகால-தேச-கால-வர்த்தமானத்தில், உலகமயமாதல் பொருளியல் ஓட்டத்தில் மகிந்தா இருந்த இடத்தில் ரணில் இருந்தாலும், சீனாவின் நிலை இப்படித்தான் இருக்கும்! அம்பாந்தோட்டைக்கு இல்லாவிட்டாலும் அம்பலாங்கொடைக்காவது ரணில் சீனாவை ஓர் வேலைக்காவது  அழைத்திருப்பார்.  இது இன்றைய இலங்கை நிலை மடடுமல்ல, பல் 3-ம் உலக நாடுகள் பலவற்றின் வேலைகளில்-உதவிகளில் சீன- நிலையும் நடைமுறையும் இதுதான். இங்கு முக்கிய கேள்வி இலங்கை விடயத்தில் சீனா,  இலங்கை அரசு சொல்வதை செய்கின்றதா? இந்தியா போன்று பீக்கிங்கிற்கு மகிந்த-மந்திரிகளை கூப்பிட்டு இலங்கை உள்விவகாரங்களில் அது ஏன் அப்பிடி இப்பிடி என்று ஏகாதிபத்திய-மேலாதிக்கக் கேள்விகள் கேட்கின்றதா?

கடந்த மே 18-ன் பின் சீன வெளிநாட்டமைச்சர்--அல்லது ஆலோசகர்கள்-தூதுவர்கள் எத்தனை தடைவ இலங்கை வந்திருப்பார்கள?. இலங்கையின் தேசிய-சர்வதேச நிலைமைகள் பற்றி ஆராய ஆணைகள் இட ஓடர்கள் போட? இவற்றிற்காக யப்பானிய இந்தியத் தலைவர்கள் எத்தனை தடைவ வந்து போயுள்ளார்கள்?! இலங்கை அரசு பிரபாகரனை பிடித்து வைத்துக்கொண்டு சீனாவிடம் கேட்கவில்லை, இந்தியாவிடம்தான் கேட்டது “இவரை உங்களிடம் தரவா என? கடைசியில் இந்திய முடிவே பிரபாகர முடிவாயிற்று! எனவே இவையும் இவை போன்ற ஏனைய பலவற்றுக்கு ஊடாக பல விடயயங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்! அத்தோடு சீனா பற்றிய விவாதத்திற்குரிய விடயங்களும் உண்டு. அதை கட்டுரைகளுக்கூடாக விவாதங்களுக்கு ஊடாக பார்ர்போம்! இதை விடுத்த புலுடாச் செய்திகள் ஆரோக்கியமான அரசியலுக்கு உதவா!