Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கடை ஐனாதிபதி இலங்கையின் மிகப் பிரபலமான நபராம்?

எங்கடை ஐனாதிபதி இலங்கையின் மிகப் பிரபலமான நபராம்?

இப்போ--இலங்கையிலென்ன—பாருககுள்ளே அவர்தான்!

“உலகின் வேறு எந்த நாட்டையும் விட அவர் ஆட்சியிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றார்கள்!” ஆதலினால் அவரை இப்படிக்கொள்ளலாம்!....

இலங்கையின் மிகப் பிரபலமான நபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது.????

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பீடத்தின் பொறுப்பாளர் கங்கானா திஸாநாயக்கவின் வழி காட்டல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையின் மிகவும் பிரபல்யமான நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என இந்த கருத்துக் கணிப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகர் சனத் குணதிலக பாடகி நந்தா மாலினி மற்றும் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோரும் பிரபல்யமான நபர்களின் வரிசையில் முன்னணி வகிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கங்கானா திசநாயக்காவின் தொடர்பாடல்--வழிகாட்டலை உலகம் முன்மாதிரியாக கொள்ளும்!

பல்கலைக்கழக ஆய்வுகளாகும் வாய்ப்புகளும் உணடு!

இப்பேர்ப்பட்ட ஆய்வுகளுக்கூடாக மகிந்த-கோத்தபாய-மேர்வின் சில்வா போன்ற பல எண்ணற்றோர் பாருக்குள் “மிகப் பிரபலமான நபராவார்கள்!” இன்னும் கொஞ்ச நாட்களில் மகிந்தனே சகலதின் சகலகலா வல்லவன்!.

இவ்வல்லவனின் ஆட்சியில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழமுடியாத சூழல் ஏற்படப்போகின்றது என்கின்றார் ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச:-

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில்உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய மோசடிகளே இடம்பெறுகின்றது. பொதுமக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் அடக்கு முறைகள் காணப்படுகின்றது. மனித உரிமைகளுக்கோ மனிதாபிமானத்திற்கோ இலங்கையில் மதிப்பில்லை.

அரசியல் பழிவாங்கல்களும் சர்வாதிகார ஆட்சியுமே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இது உலக நாடுகள் அறிந்த உண்மை. இதனை இல்லை என அரசாங்கம் ஐ.நாவில் கூறியமை சர்வதேச மட்டத்திலான வேடிக்கையாகவே உள்ளது. சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்ல எந்தவொரு இனஅம் இலங்கையில் அச்சமின்றி வாழ முடியாது.