Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண் போராளிகளின் உழைப்பைச் சுரண்ட முற்படும் அன்னிய சக்திகள்

 

முன்னாள் பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் அரச தகவல்கள் தெரிவிக்கின.றன.  மேலம் "புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 12 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தம்மிடமுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்து இந்த பெண்களுக்கு விளக்கியுள்ளனர்." இப்படிபட்ட அக்கறை  முன்னாள் பெண் போராளிகள் மீது. தொழில் வாய்பளிக்கப்படுவதாக அரச சார்பு ஊடகங்கள் இதை தெரிவிக்னின்றது.

 

இதை பிரதான செய்தியாக தமிழோசையும் வெளியிடுகின்றது. அன்று சிறுவர்கள் வயதானவர்கள் பெண்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி தமிழன் என்றதற்காக அழித்தொழித்த இந்த அரசு, பெண்  போராளிகளின் உழைப்பை சுரண்ட தொழில் வாய்பு வழங்குகின்றது. பெண்கள் மீதான அக்கறை நகைப்புக்குரியதே. இந்த பெண்களின் உழைப்பை சுரண்டும் வகையில் அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு இவர்களின் உழைப்பை விற்கின்றது. தேச உழைப்பையும், மக்களை சுரண்டலை நடத்த செய்யப்பட்ட நாடகமே இந்த தொழில் வாய்ப்பு.