Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

அண்ணன் டக்ளஸின் வேதவாக்கு!!-சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கிடைப்பதை பெற்றுக் கொள்ளுவோம்…


இந்த செய்திக்கான   பு.ஜ.ம.மு இன்  கண்ணோட்டம்  செய்தியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கிடைப்பதை பெற்றுக் கொள்ளுவோம்…

நமக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கிடைப்பவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாரம்பரிய மற்றும் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரியாலை கிழக்கில் உள்ள வயல்நிலங்கள் 15 வருடங்களின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அரியாலை கிழக்கில் குறித்த வயல்நிலங்கள் கையளிக்கப்படும் ஏர் பூட்டு விழா என்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மதகுருமார்களுடன் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜென்ரல் சந்திரசிறி, யாழ் மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்தஹத்ருசிங்க, யாழ் மாவடட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார், விவசாய அமைச்சின் செயலாளரும் முன்னாள் அரச அதிபருமான பத்மநாதன் உள்ளிடப் பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் டக்களஸ் தேவானந்தா இன்று 400 ஏக்கர் வயல்காணிகள் மக்களிடம் கையளிக்கப்படுவதாக தெரிவித்தார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு இப்படி தொடர்ந்தும் காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். கிடைக்கும் நல்ல சந்தர்பங்களை சரியாகப் பயன்படுத்தி கிடைப்பவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

***************************

இந்த செய்திக்கான   பு.ஜ.ம.மு இன்  கண்ணோட்டம்

அண்ணன் டக்கிலஸ் தேவானந்தா வேதவாக்கொன்றை மக்களுக்கு கூறியுள்ளார். "அரசினால் கிடைக்கும் நல்ல சந்தர்பங்களை சரியாகப் பயன்படுத்தி கிடைப்பவற்றை நாம் பெற்றுக் கொண்டு அரசுக்கு விசுவாசமாக இருங்கள்". அவர் கூறியதில் பல உண்மைகள் இருக்கின்றது தான் எவ்வாறு அரசின் ஏவல் நாயாக செயற்படுகின்றாரோ அதே போன்று தமிழ் மக்களையும் சேவகம் செய்யும் படி அழைக்கின்றார். தனது விசுவாசத்தை மகிந்த குடும்பத்தினருக்கும் சிங்கள அரசுக்கும் காட்டுவதற்கு மீன்டும் பலிக்கிடாவாக தனது செந்த மக்களை பயன்படுத்தும் ஒரு வடிவமே இது. இவரின் செயற்போடு கோடாரிக் பிடியின் செயற்பாடைப் போன்றதே.