Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெனீவாக் கூட்டத்திற்கு செல்லக்கூடாது! கூட்டமைப்பிற்கு அரசு மிரட்டல்!

கடந்தவாரம் நடைபெற்ற மகிந்தா-சம்பந்தன் சந்திப்பு பற்றி பெரும்-பெரும் வியூகங்களிலான பரபரப்புச் செய்திகளை காணமுடிந்தது. சம்பந்தனின் காலில் (ஜெனீவாககூட்டம்) மகிந்தா விழுந்தது மாதிரியான சில தமிழ்த்தேசிய ஊடகங்களின்  குதூகலிப்பு!!

ஆனால் கடைசியாக கிடைக்கின்ற செய்திகளைப் பார்க்கின்றபொழுது, "அரசின் கடுமையான அழுத்தங்கள் பயமுறுத்தல்களால், கூட்டமைப்பு பினவாங்கியுள்ளதாக" அறியமுடிகின்றது. இதை அதன் அறிக்கையிலும் காணமுடிகின்றது.

"தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது.  தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது". எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது.

நேற்றும் இன்றும் அரசாங்க தரப்பினர் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு பயமுறுத்தும் பாணியிலான அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.


எதிர்வரும் 27ம் திகதி, ஜெனீவா நிகழ்விற்கு எதிராக அரசதரப்பு (எதிர்க்கட்சிகளைப்போன்று) நாடுதழுவிய எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடப்போகின்றார்களாம். இது ஜெனீவாவிற்கு எதிரானது மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கெதிரானதும் ஆகும். இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலான முன்னெச்சரிக்கையே, இப்பயமுறுத்தல்கள் கொண்ட அழுத்தங்கள்.

இதை பௌத்த பிக்கு ஒருவரும் கண்டித்துள்ளார்.


"கோமாளித்தனமான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடக் கூடாது  என தம்புள்ளை
இனாமலுவ சுமங்கலதேரர்தெரிவித்துள்ளார்".

"நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கோமாளித்தனமான செயலாகும்."

"உண்மையில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாகவே இந்தத் திட்டத்தை கருத வேண்டும். "


ப்யமுறுத்தல் இன்று கூட்டமைபிற்கு! நாளை சுமங்கல தேரோவுக்கும் ஆகலாம்!

-அகிலன் 25/02/2012