Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடரும் மீனவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இன்றுடன் 10நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று வழங்கப்படவில்லை என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிரந்தர தீர்வொன்று வழங்கப்படும் வ

ரை தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக சிலாபம் பிரதான மீன் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கும் எரிபொருள் மானிய அட்டைகளை அடுத்த வாரம் முதல் வழங்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

எனினும் இந்த நடவடிக்கை முறையானதொன்று அல்லவென மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹம்பாந்தோட்டை மீனவர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

lankaview.com\ta