Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

2009ன் ஆரம்பத்தில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை: றோகான் குணரத்னவால் ஒரு தவறான கருத்துக்கு வழி நடத்தப்படும் எண்ணிக்கையாக காண்பிக்கப்படுகிறது

16 நவம்பர் 2011 ல் கொழும்பில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சிலில் பிரித்தானிய அறிஞர்கள் சங்கத்தின் மேற்பார்வையின்கீழ் றோகான் குணரத்ன அவர்கள் மேற்கத்தைய மண்மீதுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினரை எதிர்கொள்வதற்கு வேண்டிய ஸ்ரீலங்காவின் எதிர்காலப் பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ்  விரிவான வீச்சத்தில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.

 

பரந்த அளவிலான உலகின் கவனம் ஸ்ரீலங்காவினை நோக்கித் திரும்பியிருந்த சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் கையாண்ட கொள்கைகளில் இருந்த குறைபாடுகளை அதாவது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடத் தவறியது,மற்றும் பான் கீ மூனின் தருஸ்மான் குழுவினரை அவர்களின் விசாரணையின் ஒரு பகுதியாக தீவுக்கு வருகை தரும்படி அழைக்கத் தவறியமை போன்றவற்றை, அடங்கிய தொனியில் சுட்டிக் காட்டினார்.

2009ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஈழப் போரின் கடைசிக் கட்டங்களின்போது வன்னியின் வட கிழக்குப் பகுதியின் குறுகிய நிலப்பரப்புக்குள் அகப்பட்டு இறந்துபோன பொதுமக்களின் எண்ணிக்கையைப் பற்றிய அவரது மதிப்பீட்டை நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தின் இறுதியில் அரசாங்கத்தால் பிடித்து வைக்கப்பட்ட புலி அங்கத்தவர்களான 11,800 பேர்களிடமும் செல்வதற்கு தனக்கு வழி கிட்டியதாக இங்கு குறிப்பிட்டார். (ஒருவரால் அனுமானிக்கக்கூடியது, அவர்களில் ஒரு சிலரை மட்டுமே அவர் சந்தித்தார் என்றும் எல்லோரையும் அல்ல என்றும்). மேலும் இன்றிமையாததாக அந்தப் பகுதியில் இருந்த சகல மரண விசாரணை அதிகாரிகளையும் மற்றும் சகல மருத்துவர்களையும், புலிகளால் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் உட்பட சகலரையும் நேர்காணல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவையாவும் முக்கியமாக பயனுள்ள ஆதாரமான தகவல்கள்.

பகிரங்கமான ஒரு எல்லையில் பல இடத்தும் அவர் திரும்பத் திரும்ப பொதுமக்களின் மரணம் குறித்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையையே குறிப்பிட்டுள்ளார், அவர் வலியுறுத்துவது 1400 பொதுமக்கள் அழிந்துள்ளனர் என்றும் அதில் 1200 பேர் அரசாங்கம் புலிகளை நோக்கி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இடையில் அகப்பட்டு இறந்ததாகவும் மற்றும் 200பேர் புலிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இரையாகி இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வலியுறுத்துவது இந்த மரணங்கள் யாவும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டவை என்று (அவை ஒரு போர்க்குற்றமாகாது என்று நிறுவுவதற்கு வேண்டி கூறப்படுவதாகும்.)

இந்த புள்ளியியல் மதிப்பீடு சர்ச்சைக்குரியது மட்டுமல்ல ஆனால் குறைபாடு உள்ளதும் ஆகும். செயற்கைகோள்களினால் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் பொதுமக்களின் சாட்சியம் என்பனவற்றின் மூலம் நாம் அனைவரும் அறிந்தது, முன்னணி நிலைகளை உடைத்துக் கொண்டு வெளியேற முயன்ற பொதுமக்கள்மீது எல்.ரீ.ரீ.ஈ யினர் துப்பாக்கிக் பிரயோகம் மேற்கொண்டதாகும்.

 அதேவேளை ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி  ஆட்களை வரவேற்கும் இடத்தில் வைத்து தன்னை வெடிக்க வைத்து ஓடிக்கொண்டிருந்த சக இடம் பெயர்ந்தவர்களையும் மற்றும் சில இராணுவத்தினரையும் கொன்றதுடன் அகப்பட்டிருந்த ஏனைய தமிழர்களுக்கு தெளிவான ஒரு தடுப்பு சமிக்ஞையை வெளிப்படுத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்டேயாகவேண்டும்.

அது ஒரு மிகச் சிறிய கேள்வி. குணரத்னவின் புள்ளியியல் மதிப்பீட்டைப்பற்றி நான் கருதுவது என்னவெனில் அது  அதிர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் தவறாக வழிநடத்துவதாகவும் இருப்பதாதாக தெரிகிறது.

இரண்டு பின்னணிக் காரணிகள் இந்த 1400என்கிற எண்ணிக்கையை உடனடியாகவே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. முதலில் அவர் கவனத்தில் கொள்ளத் தவறிய ஒன்று, அநேக புலிப்போராளிகள் சீருடை அணிந்தருக்கவில்லை என்பதனையும் இதனால் இறந்தவர் புதைக்கப்படும் சில சந்தர்ப்பங்களில் யார் பொதுமகன் மற்றும் பொதுமகன் அல்லாதவர் யார் என்பதை இனங்காண்பது எவருக்கும் கடினமான ஒன்றாகவே இருந்திருக்கும்.

அடுத்தது.அவரது கூற்று துல்லியமான எண்ணிக்கை போன்ற ஒரு தோற்றத்தை வழங்குகிறது, அது முற்றிலும் போலியானது. கடைசி 4 – 5மாதங்களில் இருந்த யுத்த நிலைமையும் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மற்றும் நந்திக்கடல் ஏரியின் கரையோரப்பகுதிகளில் இறந்தவர்களை அப்படியான ஒரு புள்ளியியல் மதிப்பீட்டின்படி தெரிவிக்கும் எந்த ஒரு சுய மரியாதை உள்ள நிருபரும்  அண்ணளவான மரணங்கள் என்று குறிப்பிடும் போது நிச்சயம் அதை ‘அ’ என்கிற ஒரு எண்ணிக்கைக்கும் மற்றும் ‘ஆ’ என்கிற மற்றொரு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட ஒரு வீச்சில் இருப்பதாகத்தான் குறிப்பிடுவார்.

இதன்படி குணரத்னவின் சரியான கணக்கீடு பொதுமக்களின் கவனத்துக்காக சாதுர்யமாக வழங்கப்பட்டுள்ளது. ராஜசிங்கம் நரேந்திரன் சிறிது ஆச்சரியத்துடன் இதற்குப் பதிலளித்தார்,” போர் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையில் மரணங்களைப் பதிவதற்கு அந்தப் பகுதியில் எத்தனை மரணவிசாரணை அதிகாரிகள் கிடைத்திருப்பார்கள்? இது முற்றிலும் குழப்பமான ஒன்றாகவே உள்ளது.

இன்னும் அநேகர் அங்கு வசித்திருந்தால்கூட அவர்கள் மரணிப்பதற்காக அங்கு விடப்பட்டவர்களாவார்கள். ஆயுதப்படையினர் அங்கு காலடி எடுத்து வைத்தாலேயன்றி அவர்களுக்கு உதவிசெய்ய யாரும் அங்கிருக்கவில்லை”. என்று கூறிய அவர் தொடர்ந்தும் கூறுகையில் (1) இறந்து கிடந்த உடல்களை மிதித்துக்கொண்டு ஓடியதாகவும் மற்றும் நோய்வாய்ப்பட்டும், காயமடைந்தும் பாதிப்புக்குள்ளான தங்கள் பிரியப்பட்டவர்களை அவர்களின் விதி விட்ட வழி என்று அங்கேயே விட்டு விட்டு வந்த துயரக் கதைகளை பலர் சொன்னார்கள்.

பின்னைய சம்பவம் அவர்களின் வாழ்நாளிலேயே மிகவும் வேதனையான அனுபவம். நோயுற்ற தந்தை மற்றும் ஒரு இளம் பிள்ளை அல்லது காயமடைந்த கணவன் மற்றும் ஒரு குழந்தை இரண்டில் ஒன்றையே தெரிவு செய்யவேண்டிய கட்டாயத்திலிருந்தார்கள். அந்தத் தெரிவு ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டி மேற்கொள்ளப்பட்டது என்றாலும் தாங்கள் மேற்கொண்ட அந்தத் தெரிவிற்காக அவர்கள் இன்னமும் பச்சாதாபப்பட்டு உருகுவார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றார்.

இந்த ஐயுறவான வாசிப்புகள் யாவும் ஏப்ரல் 2009ல் இறுதியான சூட்டுத் தாக்குதலற்ற வலயத்துக்கு ஓடிவந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் மெனிக்பாமில் அல்லது வேறு இடங்களில் இருந்த உள்ளக இடம்பெயர்ந்தவர்களுடன் பரஸ்பரம்நடத்திய உரையாடல்களின் விளைவாக பெறப்பட்டவையே.

இதன்படி அங்கு நிலவிய அந்த கொந்தளிப்பான நிலமையின் பிரகாரம் சில இறந்த உடல்கள் காடுகளுக்குள் கிடந்து அழுகியிருக்கும் அல்லது தகர்க்கப்பட்ட பதுங்கு குழிக்குள் புதைபட்டிருக்கும்.

குணரத்னவின் எண்ணிக்கை நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்று. கடந்த 30 மாதங்களாக  வடபகுதியில் சந்திக்கக்கூடிய தமிழர்களுடன் உரையாடல்களை நடத்தி சாத்தியமான புள்ளிவிபரங்களைத் திரட்டிவரும் தமிழ் மிதவாதிகளுடன் நான் உடனடியாகத் தொடர்பு கொண்டேன். சரியான எண்ணிக்iயை அடைவது சிரமம் என்ற அடிக்கோடிட்ட வரிகளுடன் கூடிய அவர்களின் மதிப்பீட்டின் சுருக்கத்தை இந்த விரிவாக்கங்களுக்கான ஆரம்ப கட்டமாக தர முயற்சிக்கிறேன்.

“எனது மதிப்பீடு – போராளிகள், கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் மரண விகிதம் அநேகமாக கிட்டத்தட்ட 10,000 வரை இருக்கும் அது ஆகக்கூடியது 15,000 தாண்டாது” – ராஜசிங்கம் நரேந்திரன் (2)

அண்ணளவாக 12,000 (ஆயுதம் தாங்கிய புலிகளின் கணக்கினை தவிர்த்து) – கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் (3)

எல்.ரீ.ரீ.ஈ, இயற்கை,மற்றும் பொதுமக்கள் ஆகிய எல்லாம் உட்பட கிட்டத்தட்ட 16,000 – கலாநிதி. நோயல் நடேசன ;(4)

இவர்களில் சர்வானந்தனுக்கு மட்டும் சமூக விஞ்ஞானத்தில் பயிற்சி உள்ளது. அதேவேளை நடேசன் அவுஸ்திரேலியாவில் ஒரு கால்நடை மருத்துவராகப் பணிபுரிகிறார். மற்றும் நரேந்திரனும் ஒரு கால்நடை மருத்துவரே அவர் வெளிநாட்டில் ஒரு தொழில்முறை உணவு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். சர்வானந்தன் கொழும்பு மற்றும் பருத்தித்துறையில் வசித்துவரும் அதேவேளையில் மற்ற இருவரும் தீவில் வாழும் மக்கள்மீது கொண்ட உணர்ச்சிமிகுந்த ஈடுபாடு காரணமாக தொடர்ந்து வடபகுதிக்கு விஜயம் செய்து வருகிறார்கள். அவர்கள் உள்ளக இடப்பெயர்ச்சிக்கு உள்ளானவர்களை  மெனிக்பாம் மற்றும் வேறு இடங்களில் சந்தித்துள்ளார்கள். அவர்கள் தங்கள் நட்புறவான வலையமைப்புகளையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

இதன்படி இந்த அண்ணளவான மூன்று மதிப்பீடுகளும் வெளிப்படுத்துவது புலிப்போராளிகள் உட்பட மொத்த இறப்பு வீதம் 10,000 முதல் 16,000 வரை உள்ளது என்று.

அவர்கள் மேலும் தெரிவிப்பது, மரணத்துக்கு உட்பட்வர்களில் கண்டிப்பாக குடிமக்களாக இருப்பவர்களிலிருந்து புலிப் போராளிகளை வேறுபடுத்துவதை தவிர்த்து முழு மதிப்பீடும் ஒட்டுமொத்த மரணத்துக்கான காரணங்களிலிருந்து மாறுபடவில்லை என்று – அப்படியான ஒரு பிரிவு கீழே விளக்கப்பட்டுள்ளது.

இயற்கை மரணத்தின் எண்ணிக்கைக்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரு முக்கியமான செயல்முறையை நடேசன் உட்புகுத்துகிறார். அவர் குறிப்பிடுவது எந்த ஒரு சனத்தொகையும் உதாரணமாக 100,000 என எடுத்துக்கொண்டால், இயற்கை காரணிகளான சுகவீனம் அல்லது குழந்தை பிறப்பின்போது அல்லது அறுவைச் சிகிச்சையின்போது ஏற்படும் விபத்துக்களால் ஒருகுறிப்பிட்ட தொகையானவர்கள் இயற்கை மரணமாக இறக்க நேரிடும் என்று.

இதில் எனக்கு திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஸ்ரீலங்காவில் சமீபத்தைய வருடங்களில்  வருட மத்தியில் ஏற்படும் இறப்பு விகிதம் எல்லா வகையான மரணங்களையும் சேர்த்து ஆயிரம் பேருக்கு 5.8 லிருந்து 6 ஆக உள்ளது (5).அதன்படி கிட்டத்தட்ட 300,000 பேரைக் கொண்ட மொத்த சனத்தொகையில் 12 மாதங்களில் சுமார் 1800 பேர் இறப்பார்கள் என ஒருவர் எதிர்பார்க்கலாம். வருடத்தின் மூன்றிலொரு பகுதியில் இறந்தவர்களைக் கணக்கிட்டால் 600 மரணங்களை ஒருவர் எதிர்பார்க்கலாம்.

இந்தக் கட்டத்தில் தமிழ் மக்கள் பணியாளர்களாகவும் பாதுகாப்புக் கேடயமாகவும் மற்றும் பேரம்பேசும் பண்டமாகவும் ,சிலர் சுய விருப்பத்துடனும் மற்றும் சிலர் வற்புறுத்தலின்படியும்  பிடித்து வைக்கப்பட்டனர். மேலும் மோசமான உணவு பற்றாக் குறையினாலும் கடுமையான மன அழுத்தங்களுக்கு ஆளாகினார்கள். இதன் காரணமாக வயதானவர்களின் மரணங்கள் மற்றும் இயற்கை காரணங்களால் ஏற்படும் மரணங்கள் இரட்டிப்பாகியிருக்கலாம் என்று ஒருவரால் ஊகிக்க முடியும்.

இத்தோடு பாம்புக் கடியினால் ஏற்படக்கூடிய ஒரு சில மரணங்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பாரிய சனக்கூட்டம் புதர்களுக்குள்ளும் மற்றும் காடுகளுக்குள்ளும் தஞ்சமடைந்துள்ளவேளையில் சிலவேளைகளில் இரவு நேரங்களில் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்போது, இத்தகைய இழப்புகள் அசாதாரணமானவை என்று கருத முடியாது.

இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் நடேசன், நரேந்திரன், மற்றும் சர்வானந்தன் ஆகிய மூவரும் நாங்கள் இருட்டில் தட்டித் தடவுகிறோம் என்பதை வெகு தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். நரேந்திரன் என்னிடம் சொன்னது போல “எல்லாமே ஒரு ஊகம்தான், ஆனால் றோகானின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. போராளிகள், கட்டாயமாக படையில் இணைக்கப்பட்ட பொதுமக்கள், மற்றும் அப்பாவியான பொதுமக்கள் இவர்களை வேறுபடுத்தி அறிவது மிகவும் கடினம் என்று நீங்கள் சொல்வது மிகவும் சரி”

சர்வானந்தனின் ஊக மதிப்பீடு இதன் முழு வடிவத்தையும் சுருக்கமாக வெளிப்படுத்தியது.

“கிளிநொச்சி நகரத்தின் வீழ்ச்சிக்கு (2009 ஜனவரி மூன்றாவது வாரத்தில்) சில வாரங்களின்பின் ஆரம்பமான மோதலைத் தொடர்ந்து இறுதியான 120நாட்களிலும் நடந்த மோதல்களில்தான் பெருந்தொகையான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும். எனது ஊகத்தின்படியான மதிப்பீடுகளை பின்வருமாறு கணிப்பிடுகிறேன், இந்த 120நாட்களிலும் நடந்த மோதல்களில் சராசரியாக அதி உயர்ந்த பட்ச மரணம் நாளொன்றுக்கு 100எனக் கணக்கிட்டால் 120 நாட்களில் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 12,000ஆகும்”.

இதைத் தொடர்ந்து அவர் அனுப்பிய மின்னஞ்சலில் இந்த ஊகப்படியான மதிப்பீடு “புலிப் போராளிகளின் மரணத்தின் எண்ணிக்கையை தவிர்க்கிறது ஆனால் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்ட மற்றும் தொண்டர்களாக பணிபுரிந்த ஆயுதமற்ற பொதுமக்களின் மரண எண்ணிக்கையை சேர்த்துள்ளது எனக் குறிபிடப்பட்டது. ”அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டங்களின்படி “புலிப் போராளிகள் என்பதன் வரையறை உயிர் கொல்லி ஆயுதத்தை ஏந்தியுள்ள எந்த ஒரு நபரும் எந்த வகையான உடையை அவர் அல்லது அவள் அணிந்திருந்தாலும் (இராணுவ சீருடை, சாரம், மேற்சட்டை, அரைக் காற்சட்டை, சல்வார் கமீஸ் போன்றவை) இந்த வரையறைக்கு உட்படுவார்கள். இதன்படியான அவரது திட்டத்தில் “அதே அடையாளங்களுடன் பதுங்கு குழிகளை அமைப்பவர்கள், அணைகளைக் கட்டுபவர்கள், மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு பல வித உதவிகளையும் புரிந்தவர்கள் (தொண்டர்களாகவோ அல்லது கட்டாய பணியாளர்களாகவோ) அவர்கள் ஆயுதங்களைக் கொண்டிருக்காதபடியால் (துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் போன்றவற்றை)அவர்கள் பொதுமக்கள் என்கிற பகுதியின் கீழேயே வருகிறார்கள்.

இந்த வரையறைகளுக்குள் சர்வானந்தன் 12,000 பொதுமக்கள் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளார், இந்த மொத்த மரணங்களுக்குள் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு கட்டாயமாக அல்லது தொண்டர்களாக  ஆயுதம் ஏந்தாமல் பணிபுரிந்தவர்களின் தொகை இரண்டாயிரத்துக்கு மேற்படாமலிருக்கும். தற்போதைக்கு இந்த ‘புலிகளின் துணைப்படையினர்’ என்கிற பிரிவினரை இவ்வாறு வகைப்படுத்துவோம்.

சுருக்கத்தில் இறுதி 120 நாட்களில் இறந்த உண்மையான பொதுமக்கள் என்கிற அவரது மதிப்பீட்டின்படி அத்தொகை 10,000ஆகவும் புலிகளின் துணைப்படையினரின் தொகை 2,000 ஆகவும் மேலும் புலிப்போராளிகளின் தொகை மேலும் 3,000 ஆகவும்உள்ளது.

மிதவாத அரசியல் நிலைப்பாட்டிலுள்ள அறிவுசால் தமிழர்களின் அக்கறையாகவுள்ளது இந்த வாசிப்புகளின் முக்கியத்துவத்தில் புலிப் போராளிகள் சீருடை அணிந்திருக்காதபடியால் பொதுமக்கள் துணைப்படையில் அவர்களும் கலந்துள்ளார்கள் என்பதே.

இந்த விழிப்புணர்வு சில உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட புள்ளிவிபரங்களில் பிரதிபலிக்கச் செய்தது. அவர்கள் முடிவு செய்த புள்ளியியல் கணிப்பில் புலிப்போராளிகளும் மொத்தத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். கோடன் வைஸ் அவர்கள் மேற்கொண்ட ஆரம்ப மதிப்பீடான 15,000லிருந்து 40,000 வரையான எண்ணிக்கை இந்த பிரிக்கப்படாத மொத்த தொகையையும் சேர்த்தே குறிபிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஆகஸ்ட் தொலைக்காட்சித் தொகுப்பாளியான கெரி ஓ பிரெயின் அதேபோல  பி.பி.சீ மற்றும் என்.டி.ரி.வி. போன்ற பல்வேறு முழு வீச்சிலான ஊடகங்களும் இதை மேலும் திரிபுபடுத்தின. அவர்கள் சாத்தியமான மதிப்பீட்டின் அளவாக 40,000 என்று நிர்ணயம் செய்தார்கள். இது கீழ்த்தரமான இதழியல் மற்றும் மலிவான பரபரப்பு என்பன இணைந்த ஒரு மோசமான நிலைக்கு மாறியது.

செய்திகளைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர்கள் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டும் குழுக்கள் ஆகிய இருதரப்பினரும் எல்.ரீ.ரீ.ஈ யினரின் சிறுவர் ஆட்சேர்ப்பு மற்றும் தமிழ் மக்களை யுத்த முயற்சிக்காக “கட்டாயமாக வற்புறுத்துவது” போன்ற அவர்களின் கொள்கைகளை தண்டிக்கும் விதத்தில் அவர்களின் தார்மீக அடித்தளத்தில் ஓங்கி உதைக்கலானார்கள். கட்டாய வற்புறுத்தல் எனும் பதமானது சில தருணங்களில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு  சமமான சொல்லாகப் பாவிக்கப்பட்டது,மற்ற நேரங்களில் அதன் கருத்து வித்தியாசப்பட்டது.

சாதாரண வரலாற்று அறிவுள்ள யாரும், தேசிய கட்டாயம் என்பது 1790 களில் பிரெஞ்சுப் புரட்சிப் படைகளால் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்பின் ஒரு உலகளாவிய நிகழ்வாக மாற்றம் பெற்றது என்பதை அறிந்திருக்கக்கூடும். கட்டாயமாக என்பதன் வரைவிலக்கணம் ஒரு கட்டாய ஆட்சேர்ப்பு என்பதே. அதிகார வர்க்கத்தின் தேவை என்பது ஒரு கட்டாயம். எல்.ரீ.ரீ.ஈயினரின் முறைகள் மிகவும் நேரடியானது ஆனால் இந்த வரையறுத்த குடைக்குள் இது வித்தியாசமான ஒன்று.

1790 முதற்கொண்டு அநேக நாடுகளில் தேசிய இராணுவம் என்பது கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக இருந்தது. அதன்பின்னர் அது ஒரு பெரிய இயக்கத்துக்கு தேவையான பல்வேறு வகையான பிரிவுகளையும் கொண்டதாகவிருந்தது. இந்தப் பிரிவுகள் வினியோக படைப்பிரிவு,பொறியியல் படைப்பிரிவு, உணவு வழங்கல் படைப்பிரிவு, என்பனவற்றை உள்ளடக்கியவையாகும். சமையற்காரர்கள் இல்லாமல் எந்த இராணுவமும் உயிர்வாழ முடியாது. இதனால் எல்.ரீ.ரீ.ஈயினரின் துணைக் கடமைகளை பொறுப்பேற்றவர்கள் யாவரும் பொதுமக்கள் அல்ல சாதாரணமாக அவர்கள் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப் பட்டவர்கள் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

உண்மையில்; அவர்கள் சீருடை அணிந்திருக்காதபடியால் மற்றும் அது தொண்டர் அல்லது கட்டாய ஆட்சேர்ப்புக்கான பணியாகவும் குறுகிய காலத்துக்கான தேவைக்கேற்ற பணியாகவும் உள்ளதால் அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்றே இந்த தமிழர்களில் பலரும் நினைத்திருப்பார்கள் என்கிற காரணத்தை நான் உணருகிறேன்.

எப்படியாயினும் எல்.ரீ.ரீ.ஈயினரின் முன்னணி நிலைகளில் பதுங்குழி அமைத்தல் மற்றும் அவர்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லுதல் என்பனவற்றுக்காக முறையே பொறியியற் படைப்பிரிவினரும் வழங்கல் படைப்பிரிவினரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். எனவே எனது பகுப்பாய்வு நிர்ணயம் இத்தகைய ஆட்கள் அனைவரையும் ‘புலிகளின் ஆட்கள்’ என்கிற பிரிவின் கீழேயே நிரல் படுத்துகிறது. இதன் கருத்து யாதெனில் மேலே துணைப்படை பிரிவினர் என்கிற பிரிவின்கீழ் சொல்லப்பட்ட அனைவரும் தமிழீழத்தைக் (சுருங்கிய ஒரு பகுதி) காப்பதற்காக போரிட்ட எல்.ரீ.ரீ.ஈயினரின் இராணுவத்தின் ஒரு பகுதியே.

இந்த கட்டாய பதங்களை அடிப்படையாகக் கொண்டு 2009ல் நிகழ்ந்த எல்.ரீ.ரீ.ஈயினரின் மொத்த மரணங்களை ஒருவர் தீர்மானிப்பாராகில் அது சுமார் 5,000 வரை இருக்கும் கட்டாயமான பொதுமக்களின் மரணங்கள் என்று சர்வானந்தன், நடேசன், மற்றும் நரேந்திரன் ஆகியோரது மதிப்பீடுகளின்படி கிடைக்கப்பெறும் எண்ணிக்கையானது.

சர்வானந்தன்                  10,000
நரேந்திரன்                    6,000 – 10,000
நடேசன்                      11,000
எனப் பதிவாகும்.

அவர்களின் கவனிப்புகளின் தோராயமான பாத்திரங்களிடையில் மேற்கொள்ளும் எந்த ஒரு மதிப்பீட்டுக்கும் அவர்களின் கணிப்பீட்டுக்கு பலமான ஒரு உடன்பாடு உள்ளது. ஒரு பக்கம் அவர்களின் மதிப்பீடுகள் றோகான் குணரத்னவின் கணிப்பைத் தகர்ப்பதோடு, மறுபக்கத்தில் தருஸ்மான் அறிக்கை,சனல் – 4மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அங்கங்கள் என்பனவற்றால் இயக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட தன்மையையும் வெளிப்படுத்துகிறது. பின்னைய நிகழ்வில் பரிகாசம் மற்றும் முரண்பாடு ஆகிய இரண்டும் தார்மீக அடிப்படையில் உண்மையான கோரிக்கையுள்ள தீவிரவாதத்தை ஊக்குவிப்பதோடு, இந்த அமைப்புகளால் பின்பற்றப்படும் இலக்குகளை அடைவதற்கு பல விதத்திலும் சேவையாற்றுகிறது.

(i)ஆர்.நரேந்திரனிடமிருந்து றொபேட்சுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் 2011, நவ.22 எனது கட்டுரையின் முதல் பிரதியை விமர்சித்து.

(II)ஆர்.நரேந்திரனிடமிருந்து றொபேட்சுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் 2011,நவ.20

(III)எம்.சர்வானந்தனிடமிருந்து றொபேட்சுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் 2011,நவ.19

(IV)நோயல் நடேசனிடமிருந்து றொபேட்சுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் 2011,நவ.19

[v] Quoting Dr. Susiri Weerasekera, email, 22 Nov. 2011. Confirmed by the data in http://wwwindexmundi.com/g/g/.aspx?c=ce&=26.

[vi] O’Brien on the ABC Four Corners Programme on 4 July 2011 – see Harshula 2011a Media Reaction to the Darusman Report http://jayasolutions.com/slreport/sl-Darusman-report-media-reaction.html
[vii] See Harshula Media Reaction to the Darusman Report http://jayasolutions.com/slreport/sl-Darusman-report-media-reaction.html and Harshula “Channel 4 “Killing Fields”: Journalism, Advocacy or Propaganda?” http://jayasolutions.com/slreport/sl-channel-4-journalism-advocacy-propaganda.html

22 Nov, 2011, commenting on the first draft of my article.
[ii] R. Narendran to Roberts, email, Nov 20 Nov, 2011.

[iii] M. Sarvananthan to Roberts, email 19 Nov. 2011.

[iv] Noel Nadesan to Roberts, email, 19 Nov, 2011

[v] Quoting Dr. Susiri Weerasekera, email, 22 Nov. 2011. Confirmed by the data in http://wwwindexmundi.com/g/g/.aspx?c=ce&=26.

[vi] O’Brien on the ABC Four Corners Programme on 4 July 2011 – see Harshula 2011a Media Reaction to the Darusman Report http://jayasolutions.com/slreport/sl-Darusman-report-media-reaction.html
[vii] See Harshula Media Reaction to the Darusman Report http://jayasolutions.com/slreport/sl-Darusman-report-media-reaction.html and Harshula “Channel 4 “Killing Fields”: Journalism, Advocacy or Propaganda?” http://jayasolutions.com/slreport/sl-channel-4-journalism-advocacy-propaganda.html

 

-  பேராசிரியர். மைக்கல் றொபேட்ஸ்

தமிழில்: எஸ்.குமார்

நன்றி:  தேனி.காம்