Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மோடி மொழிக் கொள்கை இலங்கைத் தமிழனுக்கு உதவுமா?

மோடி பதவியேற்ற பின்பாக உள்துறை அமைச்சு மே 27 இல் வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு சார்ந்த அனைத்து ஆவணங்களும் இந்தியில் பதிய வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. இணையங்கள், சமூகவலைத்தளங்களும் இந்தியில் தான் இயங்க வேண்டுமாம். இதே போல் கல்விப் பாடத்திட்டத்தில் வேதம் - உபநிபடதங்களை இணைக்க வேண்டும் என்றும், சமஸ்கிருத மொழி மூலம் பதவியேற்ற அமைச்சர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

இது மகிந்த அரசின் அதே கொள்கை என்பதை விட மோசமானதும்,  இனம், மதம், மொழிகள் மேலான பாசிசத் தாக்குதலாகும்.

இந்த மோடியையும், மோடி அரங்கத்தையும் நம்பி, தமிழன் இலவு காத்த கிளியாக பறப்பதானது எதார்த்தத்துக்கு முரணானதும், தன்னை தான் நம்பாத அறிவழிந்த தனமுமாகும்.