Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாத மோதல்களின் பின்ணனியில் கோட்டாபயவும் 4 அமைச்சர்களும்! நஜித் இந்திக

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சகல இனவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் வழிநடத்தி வரும் அமைப்புகள் நாட்டில் அவ்வப்போது மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.

ஆட்சியாளர்களின் மூழ்கி வரும் அரசியல் அதிகாரத்தை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தும் போது அதற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறும் ஆட்சியாளர்கள்இ மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படும் என்பதை அறிந்தும் அடிப்படைவாத கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டங்களை நடத்த இடமளிப்பதாகவும் நஜீத் இந்திக குறிப்பிட்டுள்ளார்.