Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீராம்!?

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மக்களின் மேலான சமூக அக்கறையினாலா  அல்லது யாழ்பாணத்துக்கு தண்ணிரை விற்று காசாக்கும் அக்கறையினாலா முன்னெடுக்க முனைகின்றனர்.

ஆசிய வங்கியும், நவதாரள எடுபிடிகளும் யாழ்ப்பாணத்துக்கு தண்ணிரை கொண்டு செல்ல தலைகீழாக நிற்பதன் நோக்கம் பணம் சம்பதிப்பது தான். வன்னி எழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து, யாழ்ப்பாணத்து பணக்காரணுக்கு நீரை விற்று காசாக்குவது தான். உலகமயமயதாலோ தண்ணிரை தனியார் மயமாக்கி விற்கக் கோருகின்றது. வன்னி எழை விவாசயிக்கு தண்ணீரை விற்று பணம் பண்ண முடியாது என்பதால், யாழ்பாணத்து நீர் பற்றக்குறையை பணமாக்க முனைகின்றனர்.

யாழ்ப்பாணத்து நீர் பற்றக்குறையை தீர்க்க எளிய வழிகள் உண்டு. மழை நீரை சரியாக சேகரிப்பதன் மூலம், அதைப் பூர்த்தியாக்க முடியும். இருக்கும் நீர் தேக்கத்தை ஆளப்படுத்தி பாரமரிப்பதன் மூலமும், புதிய நீர் தேக்கங்களை உருவாக்கியும் மழை நீர் கடலுக்கு வடிவதை கட்டுபடுத்துவதன் மூலம், தாராளமாக நீரை சேகரிக்க முடியும். இயற்கைச் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் நீரை பெற முடியும். பணத்தை சம்பாதிக்க முடியாது. பணம் சம்பாதிக்கவே இரணைமடுவிலிருந்து யாழ்பாணத்துக்கு நீர்.   

இதைவிட நீர் தேவையை பூர்த்தி செய்ய மாகவலித் திட்டத்தை வடக்கு கொண்டு வருவதன் மூலம், இலங்கையையே செழிப்பாக்க முடியும். அதேநேரம் இனவாதமற்ற மக்களை சமூகத்தையும் உருவாக்க முடியும். ஆனால் இனவாதிகள் முதல் நவதாரள எடுபிடிகள் வரை இதற்கு தயாராக இல்லை என்பதே உண்மை.