Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அலரி​ மாளிகைக்குள் மாணவர்கள் புகுவதென்பது புதிய விடயம் ஒன்றல்ல! புபுது ஜாகொட

altஇன்று பல்கலைக்கழகங்களுக்குள்ளும் மாணவர்கள் மத்தியிலும் அரசு தேவையற்ற வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்து இன்றுடன் 150 நாட்கள் கடந்தும் எந்த விதமான முடிவும் இதுவரை மாணவர்களுக்கு இந்த அரசால் வழங்கமுடியவில்லை. இன்று முன்னிலை சோசலிச கட்சி நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட  இவ்வாறுதெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இம்மாணவர்கள் விரிவுரைகளுக்கு செல்லவும் 03 வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அரசு தொடர்ச்சியாக தங்களது உரிமைகளை கேட்டு நியாயமான போராட்டங்கள் நடத்தும் மாணவர்கள் மீது தடைகளை விதித்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அரசு மாணவர்கள் விடயத்ததில் நீதியாக நடந்து கொள்ளாவிட்டால் தொடர்ச்சியான மாணவர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும். அவரது உரையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.