Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை ஒருமைப்பாட்டு மையத்தின் ஊடகச் செய்தி.

இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் 'மே-1" தொழிலாளர் தின ஊர்வலம் பிரான்ஸ் தலைநகர் பஸ்டில் சுதந்திர சதுக்கத்தில் பிற்பகல் 4மணிக்கு ஆரம்பமாகி நசியோன் சதுக்கத்தில் மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.

இந்த ஊர்வலத்தை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் தனது உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருடைய பங்களிப்புடன் ஏனைய தோழமை அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

பிரான்ஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில் பெரும்திரளான மக்கள் தங்கள் தங்கள் பதாகைகளை தாங்கிய வண்ணம் கோஷங்களை முழங்கியபடியும் வாத்தியங்களை இசைத்தபடியும் கலந்துகொண்டனர். இவர்களுடன் இணைந்து இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும் இலங்கையில் இன ஐக்கியம், சம உரிமை சமூக-சுற்றுப்புற-சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், அடக்குமுறைக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியபடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியது.

மே தின ஊர்வலம் அர்த்தமுள்ளதாக அமைய ஒத்துழைப்பும் உதவியும் வழங்கிய அனைவருக்கும் இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் தனது நன்றிகளைத் தெரித்துக்கொள்கிறது

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தொலைபேசி : +33 (0) 7 51 41 33 05

Blogger : http://srilankais.blogspot.fr/

Postal Address : CSSL, 10 rue Labat, 75018 Paris, France.

{jcomments on}