Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இவ்வார நிகழ்வுகளின் சாரம்!

தேர்தல் வெற்றிகள் தரும் பாடங்கள் என்ன?

அரசிற்கொதிரான சக்திகள் எல்லாம் தங்களவில் தாங்கள் பலமாக இருக்கின்றோம் எனும் தற்திருப்தி மாயையைக் களைந்து, மக்கள் மத்தியில் பலமாக இல்லையென்ற பெரும் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் தோல்விகளுக்கு ஊடாக வாக்கு வங்கியில் பலமாக (விழுந்தும் மீசையில் மண் படவில்லை) இருக்கின்றோம் எனும் தேர்தல்கால மார்தட்டலை விடுத்து, தேர்தலுக்கு அப்பாலும் மக்களின் விடியலுக்கான பலதரப்பட்ட ஜனநாயக வெகுஜனப் போராட்ட மார்க்கங்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இத்தொடர் போராட்டங்கள்தான் எதிர்காலத்தில் உங்களை பலமான சக்தியாக்கும் என்பதையும் உணருங்கள்.

அரசு தவறிழைக்கும் பட்சத்தில் அதற்கு நாம் துணைபோக மாட்டோம்…. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

மகிந்த வீட்டு செல்லப்பிராணிகள் எல்லாம் எஜமான் எதைச் செய்தாலும் வாலையும் தலையையும் ஆட்டி நன்றியறிதலைத்தான் தெரிவிக்கும். அதேபோல் அலரிமாளிகை செல்லப்பிள்ளையான டக்கிளஸிற்கும் அதே "றேஞ்சென்றால்" யார்தான் என்ன செய்ய முடியும்?... கொடிது கொடிது ஆறறிவுகள் எல்லாம் ஐந்தறிவுகள்போல் அடிமையிலும் அடிமையாதல்!

ஜனாதிபதி அல்லது பாதுகாப்புச் செயலாளரை படுகொலை செய்ய புலிகள் முயற்சித்திருக்கலாம் - ஜெயராஜ்!

"கோபி என்ற தமிழீழ விடுதலைபபுலி உறுப்பினர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை மற்றும் தப்பிச் சென்றமை போன்ற காரணிகளின் மூலம் கொழும்பில் பாரிய கொலை சதித் திட்டமொன்றின் பின்னணி அம்பலமாகியுள்ளதையும்" சுட்டிக்காட்டியுள்ளார்.!

கிறிஸ் பூதம்போல், இப்போது அரசு தனக்கெதிரான கிளம்பியுள்ள தற்போதைய ஜெனீவாப் பிசாசுகளையும், அதன் தொடராக வரவுள்ள நவநீதம்பிள்ளையின் கொள்ளிவால் பேய் விசாரணைகளையும் திசை திருப்ப அவசரம் அவசரமாக உருவாக்கியுள்ள, இன்னொரு "மெழுகுப் பூதம்தான்" கோபி தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பு. இவ்வமைப்பை உருவாக்கியதன் மூலம் வடபகுதியில் அரசு தன் குறிக்கோள் (அடக்குமுறைகள்) இலக்கில் பெரு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதற்கு ஜெயராஜ், கருணா-பிள்ளையான் போல் "அதிகளவிலான தாக்குதல்கள் நடாத்தக் கூடிய ஆற்றல் கோபி தலைமையிலான தற்போதைய புலிகள் அமைப்பிற்கு கிடையாது எனவும் தனியொரு தாக்குதலின் மூலம் ஆபத்துக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்க வேண்டுமென கோத்தபாய-உளவுப் பிரிவிற்கு இன்னோர் மிகப்பெரிய தகவலை கொடுத்துள்ளார். இதற்காக அரசு இவருக்கு அரை மில்லியோனை பரிசாக கொடுக்கலாம்.

எழுவர் விடுதலை :

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் ஏழு பேரும் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்று கோராதபோது தமிழக அரசு தானாக முன்வந்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தது ஏன் என்று மத்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் கேள்வி!

ராஜீவ் வழக்கில் இவர்கள் சொல்லும் குற்றங்களுக்கு அவர்கள் அனுபவித்த சிறைத்தண்டனை போதும் போதும் என்றாகிவிட்டது. அடிப்படையில் கருணை மனுவடிப்படையில் விடுதலை செய்வதற்கு தமிழக அரசிற்கு உரிமை உண்டென்பது எனும் உண்மை சட்டமா வல்லுனர்களுக்கல்ல, சாதாரண மக்களுக்கும் விழங்கியாகி விட்டது. இங்கே "ஈகோ" பிரச்சினையே…தண்டனையை அனுபவித்தவர்களின் விடுதலைக்கு விலங்காகியுள்ளது. அதுசரி தண்டிக்கப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டுமோ? அதை தக்கபடிதானே செய்துள்ளார்கள். காந்திதேச அரசு மனுநீதி கண்ட சோழனின் ஆராய்ச்சி மணியையா சிறைக்கூடங்களில் வைத்திருக்கின்றது? அவைகளை அடித்து தங்களுக்கு விடுதலைia கோர?

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை – இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாக்கவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் விளக்கமளித்துள்ளார் -

இந்நகைச்சுவைப் பட்டிமன்ற விவாதத்திற்கு லியோனி அல்லது சால்மன் பாப்பையா போன்றவர்கள் தீர்ப்பு வழங்கின் சிறப்பாகவும், பேருதவியாகவும் இருக்கும்!

ரஷியாவுடன் "முறைப்படி இணைந்து" விட்டதாம் கிரீமியா!

ரஷியாவுடன் கிரீமியா பகுதி "முறைப்படி " இணைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "மக்களின் இதயம் மற்றும் நினைவுகளில் கிரீமியா பகுதி ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்தது'' என்கிறார்.

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்துதான் தலைநகர் கீவை விட்டு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறினார் என்ற உண்மையை வசதியாக மறைப்பதும், வல்லாதிக்கவாதிகள் நினைப்பவைகள்தான் முறைப்படி நடக்கிறது என, அதை மக்கள் நிலைப்பாடாக இட்டுக்கட்டி, தம் காரியங்ளை சாதிப்பதுதான் இன்றைய உலகின் பிரதான ஓட்டமாகியுள்ளது. இதில் இப்படியொரு நிலை (தமிழ்ஈழக் கனவாளர்கள்) எங்களுக்கும் வராதா? என ஏங்கித் தவிக்கும் தமிழ்த்தேசியங்களின் முனகல்களையும் கேட்க முடிகின்றது. ஏகாதிபத்தியங்களின் சூட்சுமக் கயிறுகள்தன் உலகை ஆட்டுவிக்கின்றன எனும் பேருண்மையையும், அதனால் உலகமக்கள் படும் துன்ப துயரங்களை, இலவசமாக ஈழம் அமைக்கத் துடிக்கும் தமிழ்த்தேசியங்கள் கண்டு கொள்ளுமா?

ஜெனீவா கிரகப் பெயர்ச்சியின்பால் ஏற்பட்டுள்ள பலாபலன்கள்:

சிறிலங்காவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டியதில்லை – ரஸ்யா

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை! –இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஜெனீவாத் தீர்மானம்! என அமெரிக்கர்

ஐ.நா.விலிருந்து ஏழு பேரைக் கொண்ட குழு விசாரணைக்கு விரைவாக இலங்கை வரும்!.....ஐ.தே.கட்சி.

எந்த சர்வதேச விசாரணைக்குழுவையும் இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டோம்!....அரசு

ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது: பா.ஜ.கட்சி!

இந்தியா அமெரிக்க தீhமானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்.: சிதம்பரம்

இந்திய தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கவில்லை: …இந்திய அரசு

மீண்டும் எம் ஆட்சி மலர்ந்தால்…இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்படும்: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உறுதி -

அமைச்சர் சிதம்பரம் கருத்திற்கு காங். எதிர்ப்பு!

குரு புத்தியுடன் கூடிய ஏழரை நாட்டு சனிதோசம் அதியுச்சமாகிய வேளையில்தான் ஜெனிவா பெயர்ச்சி ஆரம்பமாகியது. அதனால்ததான் ஒவ்வொருவர்களின் புத்தியும் திசைமாறி குறுக்கு மறுக்காக இப்படிச் சொல்ல வைக்கின்றது. சோ-ஜெயலலிதா-வைகோ-கருணாநிதி போன்றுவர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் நல்ல சுபநேரம் பார்த்துக் கொடுத்திருப்பார்கள். சிதம்பரத்திற்கு பத்திலை வியாழன் அதனால்தான் சிவகங்கையில் இருந்து பதியை விட்டு கிழப்பி மகனை இருப்பில் ஆழ்த்தியது. புத்திர பாச-சோப வெற்றியின் பாற்பட்டே அவரும் இப்படிச் சொல்லி காங்கிரசின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். மொத்தத்தில் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கணக்கில் இருந்துதான் தேசிய-சர்வதேச அரசியலின் நடப்பு உள்ளது.