Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த வாரச் செய்திகளின் சாரம்...

சர்வதேச விசாரணை இல்லாத பிரேரணையே ஜெனிவாவில்!

"ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் உள்ளடங்காது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயம் மட்டுமே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.!"

கிளிஞ்சுது போங்க! சர்வதேச விசாரணை, மகிந்தாவுக்கு தூக்கு என்று தானே உங்கை எல்லாரும் குத்தி முறியுறாங்க. நீங்கள் என்னன்டா இப்பிடிப் போடுறியள். சர்வதேச விசாரணை சர்வஜன வாக்கெடுப்பு, தமிழ்ஈழம் எனப் புறப்பட்டுள்ள "தமிழகத்தின் உணர்வுகளிலும் மேலான உணர்வுகளுக்கு" வயித்திலை புளியைக் கரைத்து விட்டீர்களே! ஜெனீவா என்றால் இப்பிடிதான் என்று சொன்னால் சொல்லுறவர்களையும் துரோகிகள் என்று சொல்லுறவர்களும் விளங்கிக் கொண்டால் சரியுங்க.

புரட்சியில் வீழ்த்தப்பட்ட உக்ரைனின் முன்னைய ஜனாதிபதி ஜானுகோவிற்ச் ரஷ்யாவில்அரசியல் தஞ்சம் கோரினார்!

தங்களுக்கு சாதகமான நாடுகளில் அமெரிக்க-ரஸ்ய மேலாதிக்கக்காரர்கள் மக்களின் அபிலாசைகளைப் பாவித்து, அவர்களைப் போராட வைத்து, தங்களின் அடிவருடிகளை ஆட்சிக்கு கொண்டுவந்து அமர்த்திவிட்டு, புரட்சிக்கு ஊடாக வீழ்த்தப்பட்ட மக்களின் அரசுகள், அதன் தலைவர்கள் எனப் பம்மாத்து விடுகின்றார்கள். இப்போ உக்ரைனில் மேலாதிக்கப் போட்டியில் அமெரிக்க சார்பானவர் ஆட்சிக்கு வர, பதவியில் இருந்தவர் ரஸ்யாவிற்கு ஓடுகின்றார்.

இதை மக்களின் ஜனநாயகப் புரட்சியாக அமெரிக்கா காட்கின்றது. இதில் நாஜிகளுக்கும் பெரும் பங்குண்டு. இப்பாவிகளின் இயங்கு சக்தியால்தான் மக்களுக்காக உண்மையான புரட்சியை நடாத்திய அக்டோபர் புரட்சியின் தலைவர் லெனின் அவர்களின் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் நடைபெற்றது மேலாதிக்கப் போட்டா போட்டியின் பிரதிபலிப்புகளே. மக்களை புரட்சியின் பேரால் பலியெடுத்த ஆட்சி மாற்றம். இதுதானே கடந்த காலத்தில் சில மத்திய கிழக்கு நாடுகளிலும் நடைபெற்றுள்ளது.

மோடி பிரதமராக ஈழத் தமிழர்கள் விருப்பம்: வைகோ

ஈழத்தமிழர்களை வைத்து தங்கள் வயிற்றுப்பிழைப்பை நடாத்தும் தமிழக அரசியல் வியாபாரிகளின் தொல்லை தாங்க முடியல்லையே நாராயணா, என்று தணியும் இந்த அங்கிடுதத்தி அரசியல் வியாபாரிகளின் தொல்லை.

எமது நாட்டுப் பிரஜையானாலும் விடுதலை தொடர்பில் தலையிட முடியாதாம்!

"பிரித்தானிய பிரஜைகள் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது, எமது அரசாங்கத்தினால் விடுதலைக்கான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்."

உண்மைதான் உங்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கேட்க மெய் சிலிர்க்கிறது. அதுசரி நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் எதுகொண்டு இலங்கையின் உள்விவகாரங்களை ஜெனீவாவிற்கு கொண்டு வருகின்றீர்கள்? உங்கள் நலன்களுக்கு பாதகம் என்றால் சட்டத்தையும் மீறுவீர்கள். கொலை செய்யப்பட்டவருக்கும் ஜெனீவா மனித உரிமை மீறலுக்கும் சமபந்தமில்லையா? என்னையா உங்கள் மனித உரிமைக் கோட்பாடும், ஜனநாயகமும்?

நாட்டை காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது!.. மகிந்தா

இவர் இப்ப இப்பிடித்தான் பேசுவாரு. இவருக்கு "நாங்கள்தான் பிரதான எதிராளிகள்" என அமெரிக்க-ஐரோப்பியமும் அவர்களின் கூட்டாளிகளும் சைகை காட்டிக் கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கு எதிரான ஏகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக வா(ள்)ய் சவடால் விடுகின்றார் இந்தப் பயந்தாங் கொள்ளி. ஏகாதிகத்தியங்களின் சகலதையும் (மக்களின் கோவணத்தையும் உருவிக்கொள் என) தாராளமாக உள்ளே வர விட்டிட்டு, போலி ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரம் பேசுகின்றார்.