Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய சட்டத்தை தூக்கில் ஏற்ற வேண்டும்

"இது இந்த தேசம் தொடர்புடைய விவகாரம். இது என் தந்தை தொடர்புடைய விவகாரம் அல்ல. ஒரு முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளிகளே விடுதலையானால் பொது மக்களின் நிலைமை என்ன ஆவது'"என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது பெரும் தவறன செயல் என்பதில் யாருக்கும் எந்தவிதமான எதிர்க்கருத்தும் கிடையாது. அதனை செய்ய தூண்டியவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன என்பது பல அரசியல் காரணங்களிற்க்காக இன்றும் மறைக்கப்பட்டே உள்ளது.

மேலும் ராஜீவ் கொலையில் சமபந்தப்பட்ட அனைவரும் இன்று உறுதியாக மரணித்து விட்டார்கள். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரும், இந்தக் கொலை செய்தவர்களிற்கு சாதாரண உதவிகளை செய்தவர்கள். இப்படி ஒரு கொலைக்கான திட்டம் நடக்கின்றது என்பதனை பற்றி எந்த அறிவும் இன்றி உதவியவர்கள்.

நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் பெங்களுர் மோதலில் இறந்த பின்னர், கொலையாளிகளை பிடித்து விட்டோம் என்று வெளி உலகிற்கு இந்திய உளவுத்துறை காட்ட பலிக்கடாவான அப்பாவிகள் தான் இவர்கள். இவர்கள் அநாவசியமாக 23 வருடங்கள் தங்களது வாழ்வை சிறையிலே கழித்த விட்டவர்கள். இவர்களின் விடுதலைக்காக தமிழ் நாட்டிலும் உலகெங்கிலம் உள்ள தமிழர்களின் ஒற்றுமைப்பட்ட செயற்பாடு பெரும் பங்காற்றியுள்ளது.

இந்திய பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும், பாரதிய ஜனதா கட்சி வெட்பாளர் என எதிர்பார்க்கப்படும் மோடியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து வரும் நிலையிலும் இந்த விடுதலை நிகழ்ந்திருப்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தியே!

இந்திய மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை போபர்ஸ் ஆயுதப்பேரத்தில் பதுக்கி சுவிஸ் வங்கியில் தமது சொந்த கணக்கில் பதுக்கியது இந்திய தேசம் தொடர்பான விவகாரம் கிடையாதா?

போபலில் இரசாயன வாயுவை கசிய விட்டு பல லட்சக்கணக்கான மக்களை கொன்றதுடன் பலரை நிரந்தர நோயாளிகளாக்கிய இந்த நிறுவனத்திற்கு பொறுப்பாக இருந்த அண்டசனை கைது செய்யாது பாதுகாத்து அனுப்பியது இந்திய தேசம் தொடர்பான விடயமில்லையா?

இந்திய ஆளும் வர்க்கம் செய்த தேசத்துரோகங்கள், தேசம் குறித்த விவகாரம் கிடையாதா?

அப்பாவிகளை எந்த நியாயமும் இன்றி பொய் குற்றங்களை சுமத்தி 23 வருடங்கள் சிறையில் வைத்திருந்ததிற்கே இந்திய சட்டத்தையும் அதனை கட்டிக்காக்கும் இந்திய ஆளும் கும்பல்களையும் பொதுமக்கள் முதலில் தூக்கில் ஏற்ற வேண்டும்!

இந்திய ஆளும் வர்க்கம் கனிமங்களையும் தாதுக்களையும், அந்நிய வல்லரசுகளுடன் இணைந்து கொள்ளையிட ஆதிவாசிகளையும், பழங்குடி மக்களையும் அவர்களது வாழ்விடங்களில் இருந்து துரத்துவதும், இதற்கெதிராக போராடும் மக்கள் மீது ராணுவ பலம் கொண்டு "பச்சை வேட்டை" என்ற என்ற பெயரில் நடாத்தும் படுகொலைகள், இந்திய மக்கள் சார்ந்த தேசம் தொடர்பான விடயமா? இல்லை இந்திய தேசத்தை கொள்ளையிடும் விடயமா?

இந்த அநியாயத்தை செய்யும் குற்றவாளிகளிடம் நாட்டை ஆளும் பொறுப்பை கொடுத்துவிட்டு பார்த்து கொண்டிருக்கும் இந்திய சட்டத்தை முதலில் தூக்கில் போட வேண்டும். ராகுல் காந்தி அவர்களே சட்டம் தன் வேலையினை செய்யுமானால் உங்களதும் உங்கள் சார்ந்தவர்களினதும் நிலை என்னவாகும் என சற்று நினைத்துப்பாரும்.