Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை மாணவர் அமைப்பிற்கு எதிரான அரச அடக்குமுறை: நான்கு வருட சம்பவங்களின் அறிக்கை

தண்ணீர், நிலம், விதை... முதல் கல்வி வரை, தனியார் சொத்துடமையாக்கி வருகின்றது அரசு. அதாவது பன்நாட்டு மூலதனங்களின் சொத்துடைமையாகின்றது. இலங்கையின் கல்வியும், பல்கலைக்கழகங்களும் உலக வங்கியின் உத்தரவுக்கு ஏற்ப, தனியார் மயப்படுத்தும் அரசின் செயற்திட்டம் இன்று மாணவர்களின் தொடரான கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டங்களை ஒடுக்க, அரசு பாரிய அடக்குமுறைச் சட்டங்களை ஏவி வருகின்றது. கடந்த 4 வருடங்களில் அண்ணளவாக 1400 மாணவர்கள் கல்வி கற்றலில் இருந்து இடை நிறுத்தப்பட்டனர்.

இந்த வகையில் போராட்டத்தை தலைமை தாங்கும் முன்னணி மாணவ தலைவர்களின் கற்றல் செயற்பாட்டை நிறுத்துதல், பல்கலைக்கழகம் வரத் தடை, பொலிஸ் கைதுகள், நீதிமன்ற விசாரணைகள் ... என்ற பல்வேறு அடக்குமுறைகள் மூலம் பல்கலைக்கழகத்தை தனியார் மயமாக்க முனைகின்றனர். இதை விட சிறப்பு படைகளைக் கொண்டு பல்கலைக்கழகங்களை கண்காணிப்பது உட்பட, இராணுவ பயிற்சி என்று பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்க பல்கலைக்கழகத்தை ராணுவமயமாக்குகின்றது அரசு. 

இவை அனைத்தும் பன்நாட்டு மூலதனத்தின் நலன்களை தலைகீழாக நின்று முன்னெடுக்கும் அரசின் செயற்திட்டங்களாகும்.

இதை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் மீதான தொடர் அடக்குமுறை பற்றிய முழுமையான  தொகுப்பு

மாணவர்  மீதான அரசின் கடந்த நான்கு வருட அடக்குமுறை குறித்த விரிவான அறிக்கையினை இங்கே அழுத்தி தரவிறக்கவும்