Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இரு போராளிகளிற்கு விடைகொடுப்போம்!

இயற்கை விவசாய விழிப்புணர்வை தமிழ்மண்ணில் விதைத்த நம்மாழ்வாரும், பகுத்தறிவு இயக்கத்தின் செயல் வீரரான திருவாரூர் தங்கராசுவும் தமது மூச்சை நிறுத்திக் கொண்டார்கள். நம்மாழ்வார் இரசாயன உரங்கள் மண்ணை நாசமாக்குவதையும், அந்த உரங்களில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் நச்சுத்தன்மை அடைவதையும் விவசாயிகளிற்கும், பொதுமக்களிற்கும் எடுத்து சொல்வதில் தமது வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.

தங்கராசு பெரியாரின் வழிவந்தவர். அண்ணாத்துரை, கருணாநிதி போன்றவர்கள் சட்டசபையில் திராவிட நாடு காண தேர்தல் பாதைக்குப்போனார்கள். இவரோ கடைசி வரை பெரியாரின் தொண்டனாக பதவிகளின் பக்கம் சாயாமல் வாழ்ந்தார். இவர் எழுதி எம்.ஆர் ராதா நடித்த ராமாயணம் பார்ப்பனியத்தை தூக்கிப்பிடிக்கும் காங்கிரஸ் அரசினால் தடை செய்யப்பட்டது.

இயற்கையான வாழ்க்கைக்கும், பகுத்தறிவிற்கும் வாழ்க்கையை அர்ப்பணித்த இரு போராளிகளிற்கும் விடை கொடுப்போம்.

-விஜயகுமாரன்