Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த அரசு, புத்தாண்டிலும் மக்களிற்கு எதிராக பயணிக்க தன்னை தயாராக்குகின்றது!

மக்கள் கடுமையான சாவல்களை எதிர் கொள்ளும் ஆண்டாகவே 2014 பிறக்கின்றது. வன்னி மக்களின் நிலத்தை பன்நாட்டு பண்ணைக்காக அபகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அரசு, இராணுவத்துகே அதிக நிதியையும் ஒதுக்கிகின்றது. நாட்டின் நிலங்கள் முதல் தேசிய சொத்துகள் அனைத்தும் அன்னிய கம்பனிகளுக்கு விற்கப்படுகின்றன.

இலங்கை அரசின் வரவு செலவு திட்டத்தில் பெருமளவு பன்னாட்டு கடன் கொடுப்பனவு, கடனுக்கான வட்டி, அதை பாதுக்காக்கும் இராணுவத்துக்குமே ஒதுக்குகின்றது.

புலிகள் இருந்த வரை புலியைச் சொல்லியே மக்களை ஒடுக்கும் இராணுவத்தை கட்டிமைத்த அரசு, இன்று எந்த காரணமின்றி இராணுவத்தை விரிவாக்கின்றது. அனைத்து மக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தவும், ஒடுக்கவுமே தன்னை தயார் செய்கின்றது.

ஒவ்வொரு புத்தாண்டும் மக்களை ஒடுக்குவதை குறிக்கோலாக கொண்டே ஆளும் வர்க்கங்கள் செயற்படுகின்றது. மக்களோ போராட்டம் இன்றி வாழ்வில்லை என்ற நிலையில் புத்தாண்டை சந்திகின்றனர்.

வாழ்வதற்காக போராடுவதே மனித வாழ்வு என்பதை, ஒவ்வொரு புத்தாண்டின் செய்தியாகின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

1/1/2014