Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சுவிஸ்சில் கார்த்திகை வீரர்களின் நினைவுகள்

முன்னிலை சோசலிசக் கட்சியால் 16-11-2013 அன்று சுவிஸ்சில் கார்த்திகை வீரர்கள் பற்றிய நினைவுகளும், அனுபவங்களும் பகிரப்பட்டது. அதில் முன்னால் போராளிகளோடு, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எனப்பலர் பங்கேற்றனர். தோழர் பந்துல வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரு தோழர்கள் செங்கொடியை விரித்து கட்டினார்கள். தொடர்ந்து JVP யினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பற்றிய விபரணப்படம் இறந்த தோழர்களுக்கான பாடலோடு தொடங்கியது.

அப்போராளிகளின் அமைப்பு சார்ந்த செயற்பாடுகளின் பதிவுக் காட்சிகள், அவ்விடங்களை அதனுடன் தொடர்புடைய நெருங்கிய தோழர்களும், அதில் பங்கேற்றிருந்த ஒருசில தோழர்களும் நேர்த்தியாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தனர். அப்படம் கம்êனிஸ்ட்களின் ஒன்றுபட்ட போராட்டத்pனைக் கோரும் பாடலோடு முடிவு பெற்றது. இப்படம் சொல்லும் விடயங்கள் தமிழில் எழுத்து வடிவில், உரை வடிவில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது உடனடிக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மிகமுக்கியமான காரியமாகும்.

தோழர் காமினி புஸ்பகுமார அவர்களின் உரை அப்போராளிகளை நினைவு கூர்ந்ததோடு, அன்றைய பிரேமதாச அரசு எவ்வாறு எதிர்ப்புரட்சி ஆயதக்குழுக்களை உருவாக்கி எதிர்ச் செயற்பாடுகளையும், பொய்களையும் கட்டவிழ்த்து விட்டது என்பதைக் பற்றியதாக அமைந்திருந்தது. மேலும் தோழர் காமினி வெண்டக்கோன் அவர்களின் உரை அப்போராளிகள் தமது சொந்த நலன்களுக்காக அல்லாமல் மக்கள் நலன்களுக்காக பணியாற்றியவர்கள். JVP யின் வளர்ச்சியைக்கண்டு அஞ்சிய முதலாளித்துவ பிரேமதாச அரசானது அதனை நசுக்குவதற்கான செயற்பாடுகளை முடுக்கிவிட்ட போதுதான் நாமும் தற்பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம். இப் போராட்டத்தில் மொத்தமாக, 1988- 1989 காலகட்டத்தில் மட்டும் மெத்தமாக 60பது ஆயிரம் பேர் கொல்லப்ட்டார்கள். 600 வரையிலான மாணவர்கள் இதில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் 300 வரையில் கொல்லப்பட்டார்கள். புத்தபிக்குகளும் 600வரையில் அடங்கும.

அவ்வுரையில் அவர் பல போராளிகளின் இழப்புக்களை தெரிவித்தார். அதில் சாந்தபண்டார மாணவத்தலைவர், இவர் 1978.ல் ஜே. ஆர் ஜேயவர்தன அரசால் கொண்டுவரப்பட்ட கூப்பன் வெட்டு முறைக்க எதிராக செயற்பட்டவர். மற்றும் பல்கலைகழக மாணவ அணித்தலைவர்களான ரஞ்சிதம் குணரட்ணம், நிஸ்மி மொகமட், மலையகத்தில் இருந்து புறப்பட்ட மூத்த போராளி பி.தங்கராசா (1971-ல் JVP யோடு இணைந்து பணியாற்றியவர்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.

நிகழ்வின் முடிவாக இலங்கையில் இருந்து SYKPE மூலம் தோழர் ஒருவர் உரை நிகழ்தினார். இப்போராளிகள் இலங்கையின் தொழிலாள வர்கத்திற்காக அதாவது ஏழை விவசாயிகள், விவசாயக் கூலிகள், ஏழை மீனவர்கள், மீனவக் கூலிகள், ஆலைத் தொழிலாளர்கள், வேலையற்றோர், ஆகியோரின் துன்பகரமான நிலையை மாற்றவே போராடினார்கள், அவர்கள் மாக்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அறியாமையில் இருந்த விடுபட்டு சமுக அறிவயலுக்குள் நுழைந்தவர்கள், அதனால் அப்போராளிகள் இன, மத வாதங்களுக்குள் அகப்படாத முண்னணியாளர்கள், என அவர்களை பற்றிக் குறிப்பிட்டார்.

இலங்கை முதலாளித்துவ அரசுகளால், அவ்வாறான கட்சிகளால் வளர்கப்பட்ட இனமுரன்ண்பாடானது. பல ஆயிரக்கணக்கான உயிர் அழிவுகளோடு, இழப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இனப்பிரச்சனையானது முடிவில்லாமல் தொடர்கிறது. சம உரிமையற்ற நிலையில் மற்ற இனத்தவர் நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றனர். அவர்கள் மத்தியில் நாம் எமது கருத்துக்களை கொண்டு செல்ல முனைப்புடன் இருக்கிறோம். அவ்வாறு பணிபுரிந்த எமது தோழர்கள் குகன், லலித் ஆகியோர் காணாமல் போய்விட்டனர். அன்றுபோல் இன்றும் நாம் ஒடுக்கு முறைகளை எதிர் நோக்குகின்றோம்.

மாக்சிய தத்துவத்தின் அடிப்படையில் இன, மத பேதங்களுக்கு அப்பால் இணைந்த அரசியலினடாகவே இலங்கையில் முதலாளித்துவத்தை தோற்க்கடித்து, இனசமத்தவத்தையும், அனைத்து மக்களின் வாழ்கைத்தரத்தினையும் மேம்படுத்த முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் கலந்து கொண்டோர், நிகழ்வின் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகவும், ஆவலுடனும், பற்றுடனும் செவிமடுத்தனர். தம்மை முற்போக்காளர்களாக, சமூகமாற்றத்தை விரும்புபவர்களாக அடையாளப்படுத்தும், எம்மவர்களும் அழைக்கப்பட்டார்கள், ஆனாலும் பங்கேற்காத தன்மையே காணப்பட்டது. ஒரு தேசத்தினுள் நடந்த சமூகமாற்றத்திற்கான ஒரு முயற்சியை பற்றி அறிந்து கொள்ளவும், அதில் பங்கேற்றவர்களான அப்போராளிகளுடன் கலந்துரையாடவும் பயந்து பதுங்கிக் கொள்வது, என்பது வேதனையளிக்கும் விடயமாகும். இப்போக்கை மாற்றிக்கொள்வதுதான் புரட்சிகர எண்ணங்களின் உண்மைத்தன்மையாகும்.

--சுவிஸிலிருந்து தோழர் திலக்