Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சட்டத்தை மீறுபவர்கள் யார்? மக்களுக்கு எதிரானவர்கள் யார்?

தோழர் மனுவேல் 10 வருடங்களுக்கு மேல் பல்வேறு சமூக பிரச்சினைக்களுக்காக உழைக்கும் மக்களுடனும், ஒடுக்கப்படும் மக்களுடனும், மாணவர்களுடனும் சேர்ந்து பலதரப்பட்ட ஜனநாயகவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர் சட்ட கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து மாணவர் பிரச்சினைகளுக்காக முழுவீச்சாக “பொதுநலமாணவர் எழுச்சி இயக்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டு கல்லூரி, பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளை, மாணவர் தற்கொலை, மாணவிகளின் மீதான பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சினைகளுக்காக போராடி வருபவர் மீது இந்த அரசும் அதன் ஏவல் ஆட்களான காவல் துறையும் தொடர்ச்சியாக, பல பொய் வழக்குகளை போட்டு மக்களிடம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு சமூக போராளி நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியுள்ளதை போல் இயற்கை வளங்களை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றடிப்படையில் அந்த இயற்கை வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக புலிகள் காப்பகம் என்ற பெயரில் காட்டை அழித்தும், அங்கேயே பல்லாண்டு காலமாக வாழ்ந்து, அதை பாதுகாத்து வரும் பழங்குடி மக்களை காட்டை விட்டும் வெளியேற்றி வரும் இந்த மத்திய, மாநில அரசுகளின் இப்படிப்பட்ட இயற்கை வளங்களின் அழிப்பே சுனாமி, வெள்ளம், பூமியின் வெப்பம் அதிகரித்தல், புது புது நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம்.ஆக இப்படிப்பட்ட காடுகள் மற்றும் அங்கு வாழும் பழங்குடி மக்களின் நலன்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ”மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்கள் இயக்கத்தில்” கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வந்த தோழர்.மனுவேலை 5 மாதங்களுக்கு முன்பு துண்டறிக்கை விநியோகம் செய்தற்காகதேச துரோக வழக்கில் 124 (A) கைது செய்து சிறையில் அடைத்தது. உயர் நீதிமன்றம் அவர் மீதான பொய் வழக்கை தள்ளுபடி செய்து 1.11.13 அன்று விடுதலை செய்தது. ஆங்கிலேய அரசின் கொடுமைகளுக்காக எதிராக போரடியதுக்காக காந்தியும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது. ஒரு கைதி சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யக்கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி உளவுத்துறையின் சதியினால் தேனி காவல்துறை தோழர் மனுவேலை அன்று மாலையே வேறொரு வழக்கில் கைது செய்துள்ளது. இது இந்த போலி ஜனநாயக அரசின், காவல்துறையின் அராஜக தன்மையையே காட்டுகிறது. உண்மையில் சட்டத்தை மீறுபவர்களும், மக்களுக்கு எதிரானவர்களும் இந்த அரசும், காவல் துறையுமே.

நமக்கான போராட்டத்தை நாமே முன்னின்று நடத்துவோம்…!

மக்களுக்காக உழைக்கும் மக்கள் ஊழியர்களை பயங்கரவாதிபோல் சித்தரிக்கும் காவல் துறையின் நடவடிக்கையை கண்டிப்போம்...!

மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் மக்கள் இயக்கம் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

தொடர்புக்கு : 9443456023, 9443115259