Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

கல்வி உரிமைகளுக்காக போராட்டம் நடத்திய மாணவர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியமையை வன்மையாக கண்டிக்கிறோம் .

 கல்வி  உரிமைகளுக்காக   போராட்டம்  நடத்திய  மாணவர் மீது  காட்டுமிராண்டித்தனமாக  தாக்குதல்  நடத்தியமையை  வன்மையாக  கண்டிக்கிறோம் . - முன்னிலை   சோஷலிஸக்  கட்சி.

பல்கலைக்கழக  மாணவர்  எதிர்ப்புக்கு அரசாங்கம்  போலிஸைக்  கொண்டு  நடாத்திய   காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலை கண்டித்து இ  முன்னிலை சோஷலிஸக் கட்சி   நேற்று  21ந்  திகதி  ஊடக  அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

மாலம்பே  சைட்டம்  பட்டக் கடையை  இல்லாதொழிக்குமாறும்   ஏனைய   கல்வியை  தனியார் மயப் படுத்தும்  முயற்சியை   உடனடியாக   சுருட்டிக்கொள்ளுமாறும்   வற்புறுத்தி   அனைத்து  பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியம்இ  மருத்துவ பீட  மாணவர் செயற்பாட்டு  குழுஇ மற்றும்  அனைத்து  பல்கலைக்கழக   பிக்கு  சங்க  மாணவர்களால்  நேற்று   21ந்  திகதி  சுகாதார  அமைச்சினுள்  நடாத்திய  எதிர்ப்புக்கு   இவ்வாறு  மிலேச்ச   தாக்குதல்   மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவ்வாறு  ஆட்சிக்கு வரும்  அரசாங்கங்கள்இ மக்கள் அரசாங்கம்  இல்லை என்பதோடுஇ அவை  வியாபாரிகளின்   தேவைகளுக்காக  முன்னிற்பதோடுஇ இலாபத்தை  மட்டும்  கருத்தில் கொள்ளும்   முதலளித் துவத்திற்காக   முன்னிற்பதும்   மீண்டும் மீண்டும்   ஒப்புவிக்கப் பட்டுவருகிறது. 

இப்  போராட்டத்திற்கு  சமூகத்தின் சகல  முற்போக்கு  பிரிவினரும் இ சமூக  சக்திகளும்   விரிவான   ஒத்துழைப்பை  வழங்கி வருகிறது.  அரசாங்கம்  அந்த  மக்கள்  நிலைப்பாட்டுக்கு   செவி சாய்க்காமல் இ பலவந்தமான  அடக்குமுறையினை   பிரயோகிப்பதை  காணக்கூடியதாகக  இருக்கிறது. கல்வி மற்றும் சுகாதார  உரிமைகளுக்காகவும்இ தமது  உரிமைகளுக்காகவும்   போராடும்   மாணவர் இயக்கங்கள்  உட்பட  சக்திகளின்  பாதுகாப்புக்காகவும்   அணி திரளுமாறு  சகல முற்போக்கு  மக்களிடமும்  கேட்டுக் கொள்ளுவதாக   இந்த  ஊடக  அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது..