Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

லஹிருக்கு உட்பட 6 மாணவர் தலைவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர  உட்பட 6 மாணவர் தலைவர்களுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதிவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவை நேற்று  (19/5/2017) பிறப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியமை தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற் குறித்த வழக்கை  நீதிமன்ற விசாரணைக்கு எடுத்த நீதிபதி; லகிரு வீரசேகர, வண தேரர் ஞானானந்தா ,அமில சந்தருவன், பிரியதர்ஷன, தினேஷ் மதுரா  உட்பட 6 மாணவர் தலைவர்களிற்கு பிடியாணை வழங்கினார். வழக்கை எதிர்வரும்  ஆகஸ்ட் 25ம் திகதி க்கு மீள எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

தனியார் பல்கலைக்கழகங்களிற்கு எதிராகவும், இலவச கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை  உறுதி செய்யவும் னைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவினால் முன்னெடுக்ப்பட்டு வரும் போராட்டங்கள் மக்கள் மயப்பட்டு பலமடைந்து வருவதனை கண்டு மைத்திரி - ரணில் அரசு அச்சமடைந்துள்ளதே, மாணவர் தலைவர்களிற்கு எதிரான போலி வழக்குகளும் பிடியாணை உத்தரவுகளும்.