Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

முகங்கள் ஆறு, கைகள் பன்னிரண்டு!

அன்பிற்குரிய தோழர்களே, தோழியர்களே!

"சஞ்சீவ பண்டார பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்க தடையுத்தரவு". கடந்த சிலவாரங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் பிரதான செய்தியாகவிருந்தது இவ்விடயம் தான். சஞ்சீவ பண்டாரவிற்கு மாத்திரமல்ல பலருக்கு இவ்வாறு பல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பத்திரிக்கைகளில் வெளிவராத காரணத்தினால் மக்களுக்கு தெரியவரவில்லை. கடந்த மூன்று வருடங்களில் 785 மாணவர்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினை சேர்ந்த 53 மாணவர்களிற்கு மாத்திரம் 85 பிடியாணைகள் பிறபிக்கப்பட்டுள்ளன. ஜயவர்தனபுர, கொழும்பு, களனி, சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் மாணவர் ஒன்றியங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜானக, சிசித தோழர்கள் எம்மிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டனர். எழுதி கொண்டு சென்றால் மிகபெரிய பட்டியல் ஒன்றினை வெளியிடலாம். இவையனைத்தும் வேறெதற்காகவும் அல்ல. மாணவர்களாகிய நாம் சமூக உரிமைக்காக மிக சரியான முறையில் எழுப்பிடும் எதிர்ப்பு குரலே காரணம் ஆகும். இலவச கல்வியையும் கல்வி சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்காக நாம் எழுப்பிடும் குரலை அடக்கிடவே இத்தனை அடக்குமுறைகளையும் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களை தன் கைபிள்ளைகளாக ஆக்கி கொள்ளும் முயற்சியே இதுவாகும்.

இன்று பலமுனைகளில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மாணவர் ஒன்றிய தலைவர்களின் வீடுகளுக்கு புலனாய்வு துறையினரை அனுப்பி பெற்றோர்களை அச்சறுத்துகின்றனர். ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தப்படுகின்றனர். நிர்வாகத்தினை பயன்படுத்தி மாணவர்கள் மீது வகுப்பு தடை விதிக்கின்றனர். சட்டத்தை பயன்படுத்தி சிறைலடைக்கின்றனர். இவையனைத்தும் ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளையும் கொண்ட கடவுளின் நடவடிக்கை போன்றதாகும். அனைத்தும் ஒரிடத்திலிருந்து ஒரே நோக்கத்திற்காக செய்யப்படுபவனவாகும். நிர்வாகம், ஊடகம், பொலிஸ், நீதிமன்றம், சிறைகூடங்கள் என பலவற்றினை பயன்படுத்தி அனைத்தும் செய்யப்படுகின்றன. ஆறு முகங்கள் அல்ல, இருபத்து நான்கு முகங்கள் வந்தாலும், திரிமா, நிஸ்மி, வெனுர, பாலேக்களின் உதிரத்தினால் உரம்பெற்ற மாணவர் இயக்கத்தின் கொடியை நாம் ஒரு போதும் கீழிறக்க போவதில்லை. ஆகவே தான் உறுதியுடன் முன்வருமாரு அழைப்பு விடுக்கின்றோம். அதேநேரம் இந்த அடக்குமுறையை எதிர்கொள்ள நாம் ஒற்றுமையாய் ஒரணி சேர வேண்டும். அதே போல் எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பை பெற இந்நாட்டின் உழைக்கும் மக்களுடன் கைகோர்க்க வேண்டும்.

ஆம் நாம் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என சகல ஒடுக்கப்பட்டவர்களினதும் ஒத்துழைப்பினை கோரல் வேண்டும். தெளிவாக சொல்வதென்றால் இப்போராட்டத்திற்கு எம் பெற்றோர்களின் ஒத்துழைப்பினை பெறல் வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் தான் அரசாங்கத்தினால் பதில் கூறாமல் இருக்க முடியாத நிலை தோன்றும். ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனைவரும் தோல்வி கண்டுள்ளனர். எனினும் உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அரசாங்கம் ஏமாற்று ஒய்வூதிய சட்டமூலத்தினை சட்டமாக்கிட முயற்சித்த வேளையில் தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டது. ஆகவே நாம் அவர்களின் ஒத்துழைப்பினை பெறல் வேண்டும். அதற்காக நாம் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு உங்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். இவ் நெருக்கடியான காலகட்டத்தில் போராடுவதினை கைவிடாத, போராட்ட குணம் கொண்ட உண்மையான தோழர் தோழியராய் எழுந்திடுங்கள் என உங்களிடம் கோருகின்றோம். அதற்காக ஒன்றினைவோம்! ஒரணித்திரள்வோம்! வெற்றி உங்களுக்கே!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை