Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தென்னாபிரிக்காவில் ஒபாமாவின் வருகையினை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!!

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஒபாமாவை எதிர்த்து, Soweto பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பகுதிகளில் தான் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஏறத்தாழ 1000 மேற்ப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், தென்னாபிரிக்கா கம்யூனிஸ்டுக்கள், முஸ்லீம் மக்கள் தென்னாபிரிக்காவிலுள்ள அமெரிக்க தூதராலயத்தின் முன்னால் திரண்டு அமெரிக்க வெளிவகாரக் கொள்கைக்கு எதிராக கண்டனத்தினையும் பதிவு செய்தனர். குறிப்பாக உலகில் எழுந்து வருகின்ற மக்களின் எழுச்சிகளை நீந்து போகச் செய்யும் அமெரிக்க நரித்தனத்திற்கு எதிரான கண்டனத்தினை தெரிவித்தனர்.

தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் (COSATU) மற்றும் பல்வேறு மாணவர் சங்கங்கள் Soweto உள்ள ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டிருந்தனர். மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் அட்டைகளில் தமது முழக்கங்களை எழுதி வைத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். ஒபாமாவிற்கு இந்தப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அழிக்க் கூடும் என அறியப்பட்டதாலேயே இங்கும் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை தென்னாபிரிக்க பொலீஸ் தடியடி நடாத்தி கலைத்தது. பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தின் போது பெருமளவில் படைகள் பாதுகாப்பு பணிகளில் இறக்கி விடப்பட்டிருந்ததனை காணக் கூடியதாக இருந்தது.