Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரேசிலில் அரசுக்கு எதிரான மக்களின் கலவரம்

பிறேசில் நாட்டில், பேரூந்து கட்டண உயர்வை எதிர்த்து சாவோ பவுலோ நகரில் தொடங்கிய மக்கள் எழுச்சி, நாட்டின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பிராசிலியாவில் இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தினை ஆக்கிரமித்துள்ளனர். இந்த எழுச்சி நாடு பூராகவும் பரவி  தற்போது ஊழல் மயமான அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமாக  மாறியுள்ளது.

2014இல் ஆண்டு நிகழவுள்ள உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்திற்கான போட்டிகளுக்காக அதி நவீன மைதானத்தை கட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கம், பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துச் செல்வதுடன், மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு பணம் இல்லை என்று கையை விரித்ததுள்ளது. இதனால் மக்களின் கோபாவேசம் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளது. பிறேசில் நாட்டு பொருளாதாரம் வளர்ந்து போதிலும், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதன் பயனை அனுபவிப்பதெல்லாம் அங்குள்ள பெரும் முதலாளிகளே!