Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்கள் விடுதலை இயக்கம், மலையக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வுகள் (படங்கள்)

மலையக மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் கோரிக்கைகளான நாளொன்றிற்கு 1000 ரூபா சம்பளம் மற்றும் சொந்த காணி - வீடு ஆகியவற்றிற்க்கான போராட்டம் காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும்  மலையக அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்பட்டு, எந்தவித தீர்வுகளையும் வழங்காது இழுத்தடிப்புக்கு உள்ளாகி கொண்டு வருகின்றது. 

குறிப்பாக மலையக பெண்கள் இதனால் மிகப் பல வருடங்களாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெண்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்த தோழியர்கள் மலையக பெண்கள் மத்தியில் அவர்கள் முகம் கொடுக்கும் நாட்கூலி, காணி, வீடு போன்ற பல பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பிரச்சாரம் ஒன்றினை டிசம்பர் 10ம், 11ம் திகதிகளில் பதுளை மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளனர். அவை குறித்த படங்கள் இங்கே...