Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாளை கனடாவில் பகிரங்க கூட்டம் - ஊடகவியலாளர் சந்திப்பு

அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி போராடி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் போராடி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையே தமது முதற் செயற்பாடா இருக்கும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு முதல் மைத்திரி - ரணில் கூட்டு வரை அது பற்றி இன்று வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாலும், விடுதலை செய்ய முடியாதவர்களாலும் எப்படி நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டடைய முடியும்?

அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்காக கனடாவில் சமவுரிமை இயக்கம் கனடா ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும், மக்கள் பகிரங்க கூட்டம் ஒன்றினையும் நாளை 27-2-2016 சனி அன்று ஒழுங்கு செய்துள்ளது.

மிக அதிகளவிலான இலங்கைப் புலம்பெயர் சமூகம் ரொறன்ரொவில் இருப்பதால், இலங்கையிலுள்ள அனைத்து அரசியற்கைதிகளினதும் விடுதலையை வெற்றிகரமாகக் கோருவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

அமைதி ஆர்வலர்கள், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களுடன் இணைந்து இந்த சட்டவிரோத நிலைமைகளின் கீழ் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்ற நூற்றுக்கணக்கான மக்களுக்காக குரல் எழுப்புவதன் மூலம் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத்தர அணிதிரள்வதுடன் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம்.

இலங்கையில் சமாதானம், ஜனநாயகம், நீடித்த அமைதி, நீதியினைப் பெற்றுக்கொள்வது, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வது எங்கள் எல்லோரினதும் பலத்தினால் முடியும்.

அனைத்து அரசியற்கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்!

சமவுரிமை இயக்கம் - கனடா

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்றர்; ஒன்றாரியோ
காலம்:  சனிக்கிழமை 27 பெப்ரவரி 2016
நேரம்: பிற்பகல 3:00 மணி முதல்