Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அவர்களுக்கு கொண்டாட்டம் - எங்களுக்கு திண்டாட்டம்

நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து பாசிச மகிந்த ஆட்சியினை மக்களின் பெரும் ஆதரவுடன் வீழ்த்தி மைத்திரி - ரணில் கூட்டு ஆட்சியை அமைத்தது. தற்போது இவர்களது ஆட்சி ஒரு வருடம் நிறைவுற்றும் விட்டது. இவர்கள் தருவதாக கூறிய ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் லட்சணத்தை நாம் ஏற்கனவே பல சந்தர்பங்களில் இனங்கண்டு விட்டோம். மக்கள் தமது ஜனநாயகத்திற்க்காக போராடிய வேளையில், அரச படைகளை அவர்கள் மீது ஏவி விட்டதனை கொட்டகேனா, மீதோட்டமுல்ல, பாண்டகிரிய, தம்புள்ள, யாழ்ப்பாணத்தில் அனுபவித்து விட்டோம்.

மேலும் மகிந்த ஆட்சிக்கு சற்றும் சளைக்காது நாட்டை அந்நிய முதலீட்டாளர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றது. கல்வி, மருத்துவம், விவசாயம் என பல துறைகள்  தீவிர தனியார் மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களின் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விலைவாசி விண்ணை தொடும் அளவு உயர்ந்து செல்கின்றது.

"அவர்களுக்கு கொண்டாட்டம்-  எங்களுக்கு திண்டாட்டம்" என்ற தொனிப்பொருளில் முன்னிலை சோசலிசக் கட்சி நாடு தழுவிய கருத்தரங்குகளை நடத்தி, இன்றைய ரணில் -மைத்திரி அரசின் மக்களுக்கு எதிரான அரசியலை அம்பலப்படுத்தி வருகிறது. இதன் ஆரம்ப நிகழ்வாக இன்று (01/02/2016) கேகாலையில் பகிரங்க கருத்தரங்கு இடம்பெற்றது. அந்நிகழ்வின் படங்களை இங்கே காண்கின்றீர்கள்.