Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

செல்வராசா கஜேந்திரன் கைது!

altதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று மாலை மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 எனினும் மேலதிக தகவல்களைப் பெறும் பொருட்டு பொலிஸ் ஊடகப் பிரிவை நாம் தொடர்பு கொண்ட போது இது தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.