Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியா பொலிசாரால் தடுத்து வைப்பு!

கொழும்பில் நாளை 06/03/2013 புதன்கிழமை நடைபெறவிருக்கும் காணாமல் போனோர் மற்றும் தடுப்பு முகாமில் உள்ளவர்களின் உறவினர்கள் யாழ்பாணம், கிளிநொச்சி, மன்னர் மற்றும் வவுனியாவில் இருந்து பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்த உறவினர்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் 15 பஸ் வண்டிகளில் மாலை 6 மணிக்குப் வவுனியாவில் இருந்து பயணமாக இருந்த வேளை, அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வவுனியா பொலிசார் அவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றனர்.

15 பஸ் வண்டிகளில் அந்த மக்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமல்போனவர்கள், போரின் போதும் போதும் காணமல் போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமல் போனோரை அவர்களின் உறவினர்கள் கொழும்பு  புறப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் இந்த பாசிச அரசின் உண்மை முகம்.